ரியல் ஹீரோக்களால் உருவான ரீல் சினிமாக்கள்

உண்மை சம்பவங்கள் சில நேரங்களில் சினிமாவாக எடுக்கப்படுவதுண்டு. அது மாதிரியான படங்கள் தமிழில் வெளியாகி வெற்றியும் பெற்றுள்ளன. பில்லா, ரங்கா தொடங்கி சந்தனக்கடத்தல் வீரப்பன் திரைப்படம் வரை பல படங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. இந்த படத்தில் நடித்த ஹீரோக்கள் பலரும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளனர். சில படங்கள் இன்றைக்கும் ரீமேக் ஆகியுள்ளது. இதுபோன்ற ரியல் ஹீரோக்கள் சினிமா ஹீரோக்களாக
மாறிய கதையை தெரிந்து கொள்ளுங்களேன்.

டெல்லியை கலக்கிய ரவுடி இந்தியில் அமிதாப் நடித்தார். அதே கதையை தமிழில் ரஜினி நடித்தார். இதையடுத்து இந்தியில் ஷாரூக்கான் நடிக்க ரீமேக் ஆனது பில்லா. அஜீத் நடிக்க தமிழில் ரீமேக் ஆனது.

பில்லாவின் வெற்றிக்குப் பின் ரங்கா என்ற படத்தில் 1982ல் நடித்தார் ரஜினி. ரங்காவும் பிரபல ரவுடிதான். ஆனால் பில்லா வெற்றி பெற்ற அளவிற்கு ரங்கா வெற்றி பெறவில்லை.

ராபர்ட் ராஜசேகர் இயக்கிய இந்த படத்தில் முதலில் தியாகராஜன்-சரிதா நடித்தார். 1983ல் படம் வெளியானது. இதையடுத்து தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த்- மீரா ஜாஸ்மீன் மலையூர் மம்பட்டியான் ரீமேக்கில் நடித்தார். பழைய மம்பட்டியானைப் போல இது வெற்றிபெறவில்லை.

மதுரை கரிமேடு பகுதியில் வாழ்ந்த கருவாயன் என்பவரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் கரிமேடு கருவாயன். விஜயகாந்த், நளினி நடித்த இந்த படத்தை இயக்கியவர் ராமநாராயணன். சங்கிலிமுருகன் இந்த படத்தை தயாரித்திருந்தார்.

1994ல் வெளிவந்த படம் சீவலப்பேரி பாண்டி. இதில் பாண்டியாக அருவா வீசினார் நெப்போலியன் அவருக்கு இணையாக நடித்தார் சரண்யா பொன்வண்ணன். இந்தப் படத்தை பிரதாப் போத்தன் இயக்கினார்.

அண்ணமார் சாமிக்கதை என்று கொங்கு மண்டலப்பகுதிகளில் கூறப்படும் பொன்னர் சங்கர் வாழ்க்கை வரலாறு கதையில் இரட்டை வேடத்தில் நடித்தார் பிரசாந்த்.

சந்தனக்காட்டை சுற்றி வந்த வீரப்பன் கதை முதலில் டிவி சீரியலாகத்தான் வெளியானது. அந்த சீரியலுக்கு கிடைத்த வெற்றியை அடுத்து 2012ம் ஆண்டு சினிமாவானது. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியானது. இதில் வீரப்பனாக கிஷோரும், அவர் மனைவி முத்துலட்சுமியாக விஜயலட்சுமியும் நடித்திருந்தனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் சாம்பல் பள்ளத்தாக்கு ராணி என்று கொண்டாடப்பட்ட கொள்ளைக்காரி பூலான் தேவியின் கதை இந்தியில் பாண்டிட் குயின் என்ற பெயரில் வெளிவந்த்து இந்த திரைப்படத்தினை சேகர் கபூர் இயக்க, சீமா விஸ்வாஸ் பூலான் தேவியாக வாழ்ந்திருந்தார்.

பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget