கர்ப்பவதியான கிம் கர்தஷியான் இப்போதும் கூட கையை, காலை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டேங்குறாராம். தொடர்ந்து கவர்ச்சிகரமாகவே வளைய வந்து கொண்டிருக்கும் அவர் அதி வேகமாக நடந்தும், ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்தும் சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்தநிலையில் தற்போது தனது மேடிட்ட வயிறுடன் பிகினி உடையில் காட்சி தந்து புது ரகளை கிளப்பியுள்ளார் கிம்.
கடந்த வாரம் கிரீஸுக்கு விடுமுறையைக் கழிக்கப் போயிருந்தார் கிம். அங்கு பிகினி உடையில் காட்சி தந்தார் கிம் - தனது மேடிட்ட வயிற்றுடன்.
அன்றைய நாள் முழுவதையும் பிகினியிலேயே ரவுண்ட் அடித்துக் கழித்தார் கிம். அந்தப் படங்கள் யுஎஸ் பத்திரிக்கை ஒன்றில் வெளியாகியுள்ளது.
இப்போது கிம் 7 மாத கர்ப்பமாக இருக்கிறாராம். நன்கு ஆரோக்கியமாக இருக்கிறார். குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் சொல்லியுள்ளனராம்.
தனது குழந்தையை படு ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறாராம் கிம். குழந்தை பெறும் நாளுக்காக கிம் காத்துக் கிடப்பதாக அவரது குடும்ப வட்டாரம் பெருமையுடன் சொல்கிறது.