தற்போது, "விஸ்வரூபம் -2 பட வேலைகளில் தீவிரமாக உள்ளார், கமல். "விஸ்வரூபம் படத்தை தானே இயக்கி, நடித்து தயாரிக்கவும் செய்த கமல், இந்த முறை தயாரிப்பு பொறுப்பை ஆஸ்கர் பிலிம்சிடம் விட்டுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள், "விஸ்வரூபம் 2 திரைக்கு வந்துவிடும் என்று கருதப்பட்டு வரும் நிலையில், அதற்கடுத்து ஹாலிவுட் படத்தைதான், கமல் இயக்குவதாக முன்பு கூறப்பட்டது. ஆனால் இப்போது, அடுத்து திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும்
படத்தை, கமல் இயக்கி நடிப்பதாக செய்தி பரவியுள்ளது. இப்படத்தை, லிங்குசாமிதான் இயக்குவதாக இருந்தது. பின்னர், கே.எஸ்.ரவிக்குமார் என்றார்கள். அதையடுத்து, கன்னட நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குவதாகவும் கூறினர். ஆனால், இப்போது கமலே இயக்குகிறார் என்கின்றனர். இப்படத்தின் மூலம், முதன் முறையாக, கமலுடன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கைகோர்க்கிறாராம்.