பிகினி பின்னி பெடலெடுக்கும் எமிஜாக்சன்!

தமிழில் மதராசப்பட்டினம் படத்தில் அறிமுகமானவர் எமிஜாக்சன். அந்த படத்தில் துளியும் கிளாமர் இல்லாத வேடத்தில் நடித்திருந்தார். அதேபோல், அதற்கடுத்து நடித்த தாண்டவம் படத்திலும் எல்லை மீறவில்லை. ஆனால், தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் ஐ படத்தில் அதிரடி ஆட்டம் பாட்டத்துடன் கூடிய கவர்ச்சியை அள்ளி இறைத்திருக்கிறார்.

ஆனால், தற்போது ராம்சரண் தேஜாவுடன் நடித்து வரும் தெலுங்கு படத்தில் கடற்கரையில் நீச்சல் உடையணிந்து ஹாயாக படுத்திருக்கும் காட்சிகளில் நடித்துள்ளாராம் எமி. ஹாலிவுட் நடிகையான அவருக்கு இதெல்லாம் சர்வசாதாரணமான விசயம். அதோடு அவருக்கும் இப்படி நடிப்பது புதிதும் அல்ல. அவர் நடித்துள்ள ஹாலிவுட் படங்களில் பிகினி உடையில் தோன்றியிருக்கிறார்.

ஆனால் இந்திய படங்களைப்பொறுத்தவரை நீச்சல் உடையே ஓவர்தானே. ஆனால், தெலுங்கில் முதல் படத்திலேயே வாரி வழங்கியுள்ள எமியை அடுத்தடுத்து பிட்டு துணிகளை அணிந்து நடிக்க வைக்கவும் பெரிய பெரிய திட்டமெல்லாம் தீட்டிக்கொண்டிருக்கிறார்களாம் அங்குள்ள இயக்குனர்கள்.. அதோடு கரன்சியையும் கோடி கோடியாக கொட்டிக்கொடுக்க அவர்கள் தயாராகி விட்டதால், அடுத்து தெலுங்கில் தனது கலைச்சேவையை முடுக்கி விட கோதாவில் குதிக்கப்போகிறாராம் எமி ஜாக்சன்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget