தீ குளிக்கும் பச்சை மரம் சினிமா விமர்சனம்

நடிகர் : பிரஜன்
நடிகை : சராயு அம்மு
இயக்குனர் : எம்.வினீத், எம்.பிரபீஷ் 
இசை : ஜித்தன் ரோகன்
ஓளிப்பதிவு : மது அம்பாட்

மனித உறுப்பு திருட்டு பற்றி படம்.

விவசாயியான நிழல்கள் ரவியின் மகன் பாண்டி. கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறார் அப்பா. சிறுவயதிலேயே அனாதையாகும் பாண்டி சித்தியின் கொடுமைக்கு ஆளாகிறான். பள்ளியில் திருடன் பட்டம் சுமத்த காரணமாக இருந்த ஆசிரியரை நண்பர்களுடன் சேர்ந்து கொலைசெய்துவிட்டு ஜெயிலுக்கு செல்கிறான்.

வாலிபனாகி வெளியே வருபவனை காதலிக்கிறாள் சந்திரிகா. இருவரின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாள் சந்திரிகாவின் சகோதரி. ஒரு கட்டத்தில் இருவரும் பாண்டி, சந்திரிகா திருமணம் நடக்கிறது. எந்த வேலையும் இல்லாததால் குடும்பம் வறுமைக்கு ஆளாகிறது. 

அரசு மருத்துவமனை பிணவறையில் உதவியாளர் வேலைக்கு செல்கிறான். அங்கே உறுப்பு திருட்டு நடப்பதை தெரிந்து கொண்டு டாக்டரை கண்டிக்கிறான். உள்ளூர் போலீஸ் அதிகாரி ஒருவரின் எதிர்ப்புக்கும் ஆளாகிறான். இருவரும் சேர்ந்து பாண்டியின் மனைவியை கொன்றுவிடுகிறார்கள். இதற்காக பழி தீர்க்கும் பாண்டி செயல் வெற்றிபெற்றதா? அவனது இறுதி முடிவு என்னவானது என்பதே கிளைமாக்ஸ்.

பருத்திவீரன் பாணியில் ரத்தமும், சதையும் கதை சொல்ல முயற்சித்து இருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்களான வினிஷ், பிரபீஸ். பிரஜனின் தோற்றம் படத்தில் வித்தியாசம். மனைவியை இறந்ததை பார்த்து கதறி அழும் காட்சிகளில் பரிதாப்பட வைக்கிறார். 

நாயகியாக பிரயூ. அத்தனை அழகாக இருக்கிறார். நடிக்கவும் செய்கிறார். தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் உண்டு. எம்.எஸ்.பாஸ்கர் இடையிடையே கிச்சுகிச்சு மூட்டுகிறார். இயக்குநர் டி.பி.கஜேந்திரன், நிழல்கள் ரவி உட்பட பலரை பார்க்க முடிகிறது. 

ஒளிப்பதிவு மது அம்பாட். இசை ஜிதன் ரோஷன். வன்முறையை மட்டுமே பிரதானபடுத்தி நகரும் கதை. இன்னும் சுவராசியமாக சொல்ல முயற்சித்து இருக்கலாம்.

மொத்தத்தில் ‘தீ குளிக்கும் பச்சை மரம்’ அனல் இல்லை.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget