வத்திக்குச்சி, சேட்டை படங்களிலேயே உடல் பெருத்து காணப்பட்டார் அஞ்சலி. அதையடுத்து குடும்பத்தில் நடந்த சலசலப்பு காரணமாக உடம்பை பராமரிப்பதில் அவருக்கிருந்த நாட்டம் குறைந்து விட்டதாம். அதனால், இப்போது தெலுங்கில் நடித்து வரும் அஞ்சலி, இடுப்பு பெருத்து உருண்டு திரண்டு போயிருக்கிறாராம். இதனால் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாடில்லாமல் இருந்த அஞ்சலி, இப்போது டயட்ஸை கடுமையாக கடைபிடிக்கத்
தொடங்கியிருக்கிறாராம். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஜிம்முக்கு சென்றால் வீட்டுக்கு வரவே மறுக்கிறாராம். அதேபோல் படப்பிடிப்பு தளங்களில் ஓய்ந்து உட்காருவதை தவிர்த்துவிட்டு அங்குள்ள இளவட்ட நடிகர்-நடிகைகளை திரட்டி பேஸ்கட் பால், கிரிக்கெட் என்று ஏதாவது விளையாடிக்கொண்டேயிருக்கிறாராம். என்றாலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெருத்துவிட்ட அஞ்சலியின் உடம்பு இறங்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறதாம்.