மலர் என்ற பெயரில்தான் என்னை ரசிகர்கள் கூப்பிடுறாங்க... அதனால் என்னுடைய சொந்தப் பெயரே எனக்கு மறந்துடும் போல இருக்கு என்று அழகாய் அலுத்துக் கொள்கிறார் நாதஸ்வரம் கதாநாயகி ஸ்ருதிகா. அமைதியான மருமகளாய் அடி எடுத்து வைத்தவர். மாமியார், நாத்தனார் கொடுக்கும் குடைச்சலை எளிதாக சமாளிக்கிறார். சினிமாவில் எண்ட்ரி ஆன கையோடு சீரியரிலும் நல்ல கதாபாத்திருங்களை தேர்தெடுத்து நடிக்கும்
ஸ்ருதிகாதான் இப்போது இல்லத்தரசிகளின் பேவரைட் ஹீரோயின். மலேசியாவில் பிறந்த பெண் இப்போது காரைக்குடியே கதியென்று கிடக்கிறார். எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டால் அதற்கும் புன்னகைதான் பதிலாக வருகிறது. பிஸியான சூட்டிங்கிற்கு இடையே தன்னுடைய சினிமா, சீரியல் பயணங்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார் ஸ்ருதிகா படியுங்களேன்.
அம்மா பிறந்தது சென்னை, அப்பா மலேசியா. நான் பத்தாவது வரை மலேசியாவில் படிச்சோம். அப்புறம் சென்னை வந்து ப்ளஸ் ஒன் சேர்ந்தேன். நான் மீடியாவிற்குள் வருவதற்குக் காரணமே என் அக்கா சுதாதான். டிவி ஆங்கரிங், விளம்பரத்துறை என பிசியாக இருந்த எனக்கு வெண்ணிலா கபடிக்குழு பட வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து வேங்கையில் தனுஷ் தங்கையா நடித்தேன். மதுரை டூ தேனி படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது.
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த போது பாஸ்கர் சக்தி மூலம் இயக்குநர் திருமுருகன் அறிமுகம் கிடைத்தது. இதோ 800 எபிசோடுவரை அழகாக போய்க்கொண்டிருக்கிறது நாதஸ்வரம்.
எனக்கு ஜீன்ஸ், டிசர்ட் போட்டு நடிப்பதை விட புடவைதான் பிடித்துள்ளது. அதேபோன்ற நான் நடிக்கும் கதாபாத்திரங்களும் அமைவது என்னுடைய அதிர்ஷ்டம் என்றே கூறுவேன்.
சினிமாவில் நடித்துவிட்டு உடனே சீரியலுக்கு போனது ஏன் என்று கேட்கின்றனர். எனக்கு எல்லா கதாபாத்திரமும் நடிக்க வராது. குறிப்பா அயிட்டம் டான்ஸ் ஆட வராது. நான் நினைத்த கதாபாத்திரம் கிடைத்தால் சினிமாவில் நடிப்பேன். அதுவரை எனக்கு சீரியலில் கிடைத்து வரும் பெயர், புகழ் போது என்று கூறிவிட்டு சிரித்தபடி விடை பெற்றார் மலர் ஸ்ருதிகா.