ராஞ்ஹனா ஹீரோ தனுஷை பார்த்து பாலிவுட் ஹீரோக்கள் திருந்துவார்களா? பார்க்க பெரிதாக வசீகரம் இல்லை, உத்தமபுத்திரன் படத்தில் விவேக் சொல்வது போன்று நாலு நெஞ்சு எலும்பு, 2 நல்லி எலும்பு உள்ள தனுஷ் 6 பேக்கை காட்டி மிரட்டும் பாலிவுட்டில் ராஞ்ஹனா படம் மூலம் அறிமுகமாகியுள்ளார். படத்தின் ஷூட்டிங் நடக்கையில் தனுஷை பார்த்து பிற பாலிவுட் நடிகர்கள் மிரண்டிருக்க மாட்டார்கள்.
ஆனால் தற்போது படம் ரிலீஸான பிறகு வட இந்திய மீடியாக்களும், திரை விமர்சகர்களும் தனுஷை கொண்டாடுகிறார்கள். ஜிம் பாடியை காட்டுவதிலேயே குறியாக இருந்து முகபாவனைகள் பற்றி மறந்துவிட்ட பாலிவுட் நடிகர்கள் மத்தியில் தனுஷ் நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அவரது நடிப்பு மிகவும் அருமை என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். பாலிவுட்டில் பெயர் வாங்க 6 பேக்கும், லுக்கும் தேவையில்லை நடிப்பு இருந்தால் புகழ் பெறலாம் என்பதை தனுஷ் நிரூபித்துள்ளார். இதைப் பார்த்து பிற நடிகர்கள் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா? பாடியில் கவனம் செலுத்தும் நடிகர்களுக்கு மத்தியில் ஆமீர் கான், ரன்பிர் கபூர் உள்ளிட்ட சில நடிகர்கள் நடிப்பில் அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.