பிறக்கும் முன்னே சிசுவின் செயல்கள் - உங்களுக்கு தெரியுமா?

தாயின் கர்ப்பபையில் இருக்கும் குழந்தை தனது தாயின் குரலை கேட்டு, அதுகேற்ப செயல்படுவதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 74 கர்ப்பிணி பெண்களிடம் மேற்கொண்ட ஆய்வில் கருவிலிருந்த
குழந்தைகள் அவர்களின் தாயின் குரல்கேட்டு அதுகேற்ப செயல் படுவதாக தெரியவந்துள்ளது.

ஆய்வில் விஞ்ஞானிகள், 36 வாரம் கரு வளர்ச்சிவுடைய 74 கர்ப்பிணிகளிடம் ஒரு புத்தகத்தை அளித்து, அவர்களை அப்புத்தகத்தை சத்தம் போட்டு படிக்கவைத்தனர். தாய் புத்தகத்தை படிக்கும்போது கர்ப்பபையில் வளரும் குழந்தைகளின் செயல்பாடுகள் பரிசோதிக்கப்பட்டன.

அப்போது, தாயின் கருவில் இருக்கும் குழந்தை நகர்வதை நிறுத்தி, தாயின் குரலை கேட்டு அதுகேற்ப செயல்படுவது உறுதி செய்யபட்டுள்ளது.

தாய் புத்தகத்தை படிக்கும்போது, வயிற்றில் வளரும் குழந்தையின் இதய துடிப்பின் வேகம் சிறிதளவு குறைந்து இருந்தது. மேலும் அவற்றின் அசைவும் அடங்கி இருந்தது. அதன் மூலம் தாயின் பேச்சு மற்றும் செயல்பாடுகளை கர்ப்ப பையில் வளரும் குழந்தை கவனிப்பது தெரிய வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget