அசுர மிருகங்களுடன் அதிரடியாக சண்டை போடும் ரஜினி

ரஜினி நடித்து வரும் கோச்சடையான் படத்தைப்பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிந்து விட்டபோதும் அனிமேஷன் வேலைகள் இழுத்துக்கொண்டே போவதால், இதுவரை ஜூலை அல்லது ஆகஸ்டில் படத்தை வெளியிடப்போவதாக சொல்லி வந்தவர்கள். இப்போது படத்தின் ட்ரெய்லர், ஆடியோ வெளியிட்ட பிறகுதான் ரிலீஸ் பற்றி முடிவெடுக்கப்படும் என்று கூறி வருகின்றனர்.

மேலும், சமீபத்தில் கோச்சடையானில் சுறா மீனுடன் ரஜினி சண்டை செய்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அப்படத்தின் இயக்குனரான செளந்தர்யா மறுக்கிறார். அதேசமயம் டால்பினுடன் ரஜினி நீந்துவது போன்ற காட்சி படத்தில் உள்ளது என்கிறார். மேலும், கொடிய மிருகங்களுடன் ரஜினி பயங்கரமான சண்டை போடுவது போன்ற காட்சிகளும் உள்ளன. அவை இதுவரை சினிமா ரசிகர்கள் பார்த்திராத வகையில் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளன என்கிறார்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget