திரிஷாவுக்கு அதிர்ச்சி அளித்த அமலாபால்

திரிஷா படவாய்ப்பை அமலாபால் தட்டி பறித்துள்ளார். கவுதம் மேனன் இயக்கம் துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க முதலில் திரிஷாவை தேர்வு செய்தனர். ஏற்கனவே விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்து கவுதம் மேனனுடன் நெருக்கமான நட்பில் திரிஷா இருந்தார். அதுவே துருவ நட்சத்திரம் படவாய்ப்பு அவருக்கு கிடைக்க காரணமாக அமைந்தது என்றும் செய்திகள் பரவின. 

இந்த நிலையில் திடீரென திரிஷாவை நீக்கிவிட்டு அமலாபாலை நாயகியாக தேர்வு செய்துள்ளனர். தற்போது விஜய் ஜோடியாக ‘தலைவா’ படத்தில் அமலா பால் நடித்து வருகிறார். தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கிறார். சம்பளத்தையும் பல மடங்கு உயர்த்தி உள்ளார். திரிஷா வாய்ப்பையை பிடுங்கும் நிலைக்கு வந்துள்ள அமலாபாலின் வளர்ச்சி முன்னணி நாயகிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

விக்ரம், விஜய்யுடன் நடித்து தற்போது சூர்யாவுடனும் ஜோடி சேர்ந்து விட்டார். ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில் என்ற படத்திலும் நடிக்கிறார்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget