இந்தி, தமிழில் தோல்வி படம் தந்த ஸ்ருதிக்கு வெற்றியாகவும், திருப்புமுனையாகவும் அமைந்த படம் கப்பர் சிங். தபாங்கின் தெலுங்கு ரீமேக்கான இதில் பவர் ஸ்டார் பவன் கல்யாணுடன் ஸ்ருதிஹாசன் நடித்தார். படம் பம்பர்ஹிட்டானது.
இந்தப் படத்துக்குப் பிறகே ஸ்ருதிக்கு தெலுங்கில் தொடர்ந்து படங்கள் கிடைத்தன. அதேபோல் இந்தியிலும் இரு படங்களில் நடித்து வருகிறார்.
தபாங் 2 வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் ஆந்திராவிலும் கப்பர் சிங் 2க்கு முன் தயாரிப்பு நடக்கிறது.
முதல் பாகத்தில் ஸ்ருதி நடித்ததால் இரண்டாவது பாகத்துக்கு வேறு நடிகையை ஒப்பந்தம் செய்யவே திட்டமிட்டனர். பிறகு கடைசி நேரத்தில் ஸ்ருதியே போதும் என முடிவு செய்துள்ளனர். தபாங் 2-விலும் முதல் பாகத்தில் நடித்த சோனாக்சி சின்காதான் நடித்திருந்தார்.
விரைவில் அதிகாரப்பூர்வமாக படத்தை அறிவிக்க இருக்கிறார்கள்.