பருக்களால் முகத்தில் ஏற்படும் தழும்புகளை குணமாக்க எளிய வழிகள்

பருக்களால் ஏற்படும் வடுக்களைப் போக்க பல வழிகள் உள்ளன. டீன்-ஏஜ் பருவத்தில் இருந்து பருக்களின் பிரச்சனை ஆரம்பித்து விடுகின்றது. இதற்கு ஹார்மோன் மாற்றங்களே காரணமாக அமைகின்றது. தற்பொழுது இதற்கான மருந்து பல விதங்களில் கிடைத்தாலும், அவை அதிக பணம் கொடுத்து வாங்கும்படியாக இருக்கிறது.
எனவே வீட்டில் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டே சரிசெய்து விட முடியும்.

முகத்தை புத்துணர்ச்சியாகவும், மென்மையாகவும் வைத்து கொண்டால், தன்னம்பிக்கை மற்றும் செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பை பெற முடியும். மேலும் நம்மை காண்பவர் வியக்கும் வண்ணம், நம்மை காத்து கொண்டால், நமக்கு பல விதங்களில் வெற்றி கிடைக்கும். அதிலும் எண்ணெய் வழிந்த முகத்துடனும், பரு தழும்புடனும் இருந்தால் நமக்கே நம்மை பிடிக்காமல் போய்விடும். ஆகவே எளிய முறையில் அழகை மேம்படுத்தி கொண்டால் செல்லும் இடமெல்லாம் சிறப்பு தான் என்பதை மறந்து விடாதீர்கள். இப்போது இயற்கை முறையில் பருக்கள் மற்றும் அதனால் ஏற்படும் வடுக்களை சரிசெய்வது எப்படி என்பதை பார்போம்.

தண்ணீர் அதிக அளவில் குடித்தால், சரும வெடிப்பு மற்றும் பரு போன்ற பிரச்சனைகளிலிருந்து காத்துக் கொள்ள முடியும். ஆய்வு ஒன்றும் தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீராவது அருந்த வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றது.

வெந்தய கீரையை அரைத்து முகத்தில் தடவினால், பருக்களில் இருந்து தப்பிக்கலாம். மேலும் இதன் மூலம் மென்மையான சருமத்தையும் பெற முடியும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக அளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் இருப்பதால், அவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தையும் பெற முடியும். அழகிய சருமத்திற்கு இவை மிகவும் அவசியமானவை.

கற்றாழையை பயன்படுத்தி முகப்பரு மற்றும் அதனால் ஏற்படும் வடுக்களிலிருந்து காத்து கொள்ள முடியும். வேண்டுமெனில், லாவண்டர் எண்ணையைப் பயன்படுத்தினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

பருக்கள் இருக்கும் இடத்தை மென்மையாக மஸாஜ் செய்தால், இரத்த ஓட்டம் சீராகி, தேவையான போஷாக்கை பெற்று மென்மையான சருமத்தை பெறுவதுடன், பருவில் இருந்தும் விடை பெற முடியும்.

ரோஸ்ஹிப் விதைகளின் எண்ணையை பயன்படுத்தி, பருக்களால் ஏற்படும் தழும்பை போக்க முடியும். அதற்கு இந்த எண்ணெயை தழும்பு இருக்கும் இடத்தின் மீது தடவி மசாஜ் செய்தால், நிச்சயம் வெற்றி தான்.

ஒரு கப் பாலை நன்றாக சுண்ட காய்ச்சி, அதில் எலுமிச்சை சாற்றை ஊற்றி குளிர விடவும். பின் இதனை இரவு படுக்கும் போது முகத்தில் தடவி கொண்டு, காலையில் குளிர்ந்த நீரில் கழுவினால், பருக்கள் மறைவதுடன் மென்மையான சருமத்தையும் பெற முடியும்.

பன்னீர் மற்றும் சந்தனத்தைக் கலந்து, பரு இருக்கும் இடத்தில் இரவு படுக்கும் போது, முகத்தில் தடவி கொண்டு காலையில் கழுவினால் நல்ல பலனை காணலாம்.

தேனை, முகத்தில் அல்லது பரு இருக்கும் இடத்தில் மென்மையாக தடவினாலும், சிறந்த பலன் பெற முடியும். இதன் மூலம் இளமையான தோற்றத்தையும் உணர முடியும்.

பேக்கிங் பவுடரை தண்ணீருடன் கலந்து பேஸ்ட் போன்று செய்து, பருக்களால் ஏற்பட்ட வடுக்களின் மீது தடவி மசாஜ் செய்து, பின் தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.

பரு மற்றும் அதனால் ஏற்படும் வடுக்களையும் போக்க ஆரோக்கியமான உணவு முறையும், தொடர்ச்சியான உடற்பயிற்சியும் இருந்தால், மன அழுத்தமானது நீங்கி, அழகான தோற்றத்தைப் பெறலாம். ஒருவேளை இதன் மூலமும் பலன் கிடைக்கவில்லை என்றால் நல்ல மருத்துவரை அணுக வேண்டும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget