கர்பகாலத்தில் மகளிர் சந்திக்கக் கூடிய மறக்க முடியாத உணர்வுகள்

கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் போது ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொருவிதமான உணர்வை உணர்வார்கள். அதிலும் 18 ஆவது வாரத்தில் பல மறக்கமுடியாத உணர்வுகள் நிகழக்கூடும். மேலும் பல பெண்களுக்கு கர்ப்ப காலத்தின் ஐந்தாவது மாதம் மிகவும் பிடித்த மாதமாக இருக்கும். ஏனென்றால், இந்த மாதத்தில் பெண்கள் தங்களது கர்ப்பத்தை மிகவும் நேசிப்பார்கள்.

குறிப்பாக ஐந்தாம் மாதத்தை அடைந்தால், குழந்தையைப் பற்றிய கவலை கொள்ள வேண்டாம். இந்த காலத்திலிருந்து குழந்தைக்கு ஆபத்து எதுவும் நேரிட வாய்ப்பில்லை. எனவே எந்த ஒரு செயலையும் பயப்படாமல் செய்யலாம். அதுமட்டுமல்லாமல், இந்த காலத்தில் இருந்து குழந்தையுடன் பேசிக் கொண்டே வாழ்க்கையை கழிக்கலாம். இப்போது ஐந்தாவது மாதத்தில் கர்ப்பிணிகள் சந்திக்கக்கூடிய சில சந்தோஷங்களைப் பார்ப்போம்.

* ஐந்தாவது மாதத்தில் கர்ப்பிணிகளுக்கு எந்த ஒரு சோர்வு, மயக்கம், குமட்டல் போன்ற பிரச்சனைகள் இருக்காது. ஆகவே பெண்கள் விருப்பமான எந்த ஒரு செயலையும் செய்யலாம் மற்றும் பிடித்ததை சாப்பிட முடியும்.

* பொதுவாக கர்ப்பிணிகளுக்கு ஐந்தாவது மாதத்தில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வது வழக்கம். அவ்வாறு ஸ்கேன் செய்யும் போது, குழந்தையின் வளர்ச்சியை ஐந்தாவது மாதத்திலேயே நன்கு பார்க்க முடியும்.

* கர்ப்ப காலத்தின் 18-வது வாரத்தில் குழந்தை வயிற்றை உதைக்க ஆரம்பிக்கும். அதிலும் முதல் கர்ப்பமாக இருந்தால், இத்தகைய உதையை ஐந்தாவது மாதத்தில் உணர முடியாது. ஆனால், மிகவும் சென்சிடிவ்வாக இருப்பவர்களுக்கு, குழந்தையின் ஒவ்வொரு அசைவும் நன்கு தெரியும். எனவே இது எந்த ஒரு தாயாலும் என்றும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.

* கர்ப்பிணிகள் ஐந்தாவது மாதம் ஆரம்பிக்கும் வரை கொஞ்சமாக சாப்பிட்டு இருப்பார்கள். ஆனால் ஐந்தாவது மாதத்திற்கு மேல், வயிற்றில் உள்ள குழந்தை நன்கு வளர ஆரம்பித்துவிட்டதால், அப்பொழுது முதல் இரண்டு உயிர்களுக்காக சாப்பிட வேண்டியதாக இருக்கும்.

* சாதாரணமாக கர்ப்பமாக இருக்கும் போது பயணம் செய்ய அஞ்சுவோம். ஏனெனில் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதால். ஆனால் ஐந்தாவது மாதத்திற்கு மேல் பயணத்தை சந்தோஷமாக மேற்கொள்ளலாம். ஏனெனில் குழந்தை இந்த காலத்தில் நல்ல வளர்ச்சியில் இருப்பதால், கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. குறிப்பாக, பயணம் மேற்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

இவையே கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்தில் கர்ப்பிணிகள் சந்திக்கக்கூடிய சந்தோஷங்கள். நீங்கள் இது போன்று வேறு ஏதாவது அனுபவங்களைப் பெற்றிருந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget