திருமண தடை நீங்க யாரை வழிபடலாம்

சிவபெருமானுக்கும் அன்னை பார்வதி தேவிக்கும் திருமண வைபவம் கோலாகலமாக நடந்து கொண்டு இருந்தது. சிவ- சக்தியின் திருமணத்தை காண கைலாய மலைக்கு முனிவர்கள், தேவர்கள், பார்வதிதேவியின் உறவினர்கள், அசுரர்கள் என்று பலர் ஒன்றாக திரண்டு வந்ததால் பாரம் தாங்காமல் வடதிசை தாழ்ந்தது, தென் திசை உயர்ந்தது.

இதனால் திருமண நிகழ்ச்சியில் குழப்பம் உண்டானது. அந்த நேரத்தில் மணமகனான சிவபெருமான் அகத்திய முனிவரிடம் "அகத்தியனே நீ தென் திசைக்கு சென்று பூமியை சமமாக்கு'' என்றார். "இறைவா... தங்கள் திருமணத்தை காண பாக்கியம் இல்லாதவனா நான்'' என்று வருந்தினார் அகத்தியர். "கவலை வேண்டாம்.

 நீ எங்களை திருமண கோலத்தில் காண நினைக்கும் போது, நாங்கள் உனக்கு காட்சி தந்தருளுவோம்'' என்றார் இறைவன். அவ்வாரே தென் திசை வந்த அகத்தியரால் பூமி சமநிலையை அடைந்தது. ஒரு நாள் அகத்திய முனிவர் சிவனை நினைத்து தவம் இருந்தார். இறைவனின் திருமண கோலத்தை காண விரும்பினார். 

சிவபெருமானும் அன்னை பார்வதியும் மண கோலத்தில் அகத்தியருக்கு காட்சி தந்தனர். இப்படி இறைவனும் இறைவியும் அகத்தியருக்கு திருமண காட்சி தந்த ஊர்களில் ஒன்று திருநெல்வேலி. அகத்தியரின் வேண்டுகோளுக்கு அருளி இன்று வரை திருமண கோலத்தில் அம்மன் காந்திமதியாக பக்தர்களுக்கும் தரிசனம் தந்து வருகிறாள். 

அந்த கோலத்தை தரிசித்தால் தடைபட்ட திருமணங்கள் நடைபெறும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget