இந்தி படத்தில் விஜய்யை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. ஏற்கனவே ராவணன் படம் மூலம் விக்ரம், பிருதிவிராஜ் இந்தியில் பிரபலமானார்கள். தற்போது ராஞ்சனா படம் மூலம் தனுஷ் இந்திக்கு போய் உள்ளார். இப்படம் வெற்றிகரமாக ஓடுவதால் தனுசுக்கு மேலும் இந்திப்பட வாய்ப்புகள் குவிகின்றன. இந்தி திரையுலக மார்க்கெட்டும் ரசிகர்கள் வட்டாரமும் பெரிது என்பதால் இந்திப் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க அவர் முடிவு செய்துள்ளார்.
தனுசை தொடர்ந்து பரத்துக்கும் இந்தி பட வாய்ப்பு வந்துள்ளது. 555 பட டிரெய்லரில் பரத்தின் சிக்ஸ்பேக் உடல் கட்டை பார்த்து இந்தி படத்துக்கு அழைத்துள்ளனர்.
இவர்களை தொடர்ந்து விஜய்யும் இந்திக்கு போகிறார். விஜய், அமலாபால் ஜோடியாக நடிக்கும் தலைவா படத்தை இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதில் விஜய்யை நடிக்க வைக்க முடிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.