நடிகர் : சார்லி ஹன்னா
நடிகை : ரிங்கோ கிகுச்சி
இயக்குனர் :கில்லவர்மோ டோரோ
ஹாலிவுட்டின் அடுத்த பரபரப்பு பசிபிக்ரிம். கிங்காங், காட்சிலா, டைனோசர் வரிசையில் அடுத்து பயமுறுத்தப்போவது கைஜு. அதாவது பசிபிக்ரிம் படத்தில் இதுதான் உலகை அழிக்க வரும் விநோத
ராட்சத விலங்கு. பல கோடி ஆண்டுகளாக பசிபிக் கடலுக்கு அடியில் வசித்து வரும் கைஜு திடீரென்று ராட்சத உருவம் பெற்று உலகை அழிக்க கடலுக்குள் இருந்து வெளிவருகிறது. அதனை அழிக்க அமெரிக்க விஞ்ஞானிகள் இரண்டு ராட்சத இயந்திர மனிதர்களை உருவாக்குகிறார்கள். இரண்டும் மோதுவதுதான் பசிபிக்ரிம்மின் கதை. இது வெற்றிபெற்றால் பார்ட்&2, 3 என்று வரிசையாக வரும். இந்தப் படம் 1600 கோடியில் உருவாகி இருப்பதாகச் சொல்கிறார்கள். சார்லி ஹன்னா, இட்ரிஸ் எல்பா, சார்லிடே நடித்திருக்கிறார்கள். ராமநாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் இதனை தமிழில் டப் செய்து வருகிறது. படத்திற்கு ருத்ரநகரம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஏற்கெனவே ஒரு படத்துக்கு ருத்ரநாகம் என்று பெயர் வைத்து அது நல்ல கலெக்ஷனை கொடுத்ததால் செண்டிமெண்டாக இந்த பெயரை வைத்திருக்கிறார்கள். இந்த கிராபிக்ஸ் மாயாஜாலத்தை 3டியிலும் கண்டு ரசிக்கலாம் என்பது கூடுதல் தகவல்.