கோலிவுட்டை கலக்கும் பரபர ரகசியங்கள்

சினிமா உலகம் சென்டிமென்ட் நிறைந்தது. ஒவ்வொரு படத்தையும் தொடங்கும் நாள் முதல் ரிலீஸ் செய்யும் நாள் வரை ஒவ்வொன்றையும் நல்ல நேரம் பார்த்தே செய்வார்கள். கேட்டால் அப்பத்தானே படம் ஓடும் என்பார்கள். ஆனால் இப்படி நல்ல நேரம் பார்த்து, நல்ல நாள் பார்த்து தொடங்கப்படும் அத்தனை படங்களுமே ஓடுகிறதா என்றால் இல்லை. பத்தில் ஒரு படம் மட்டுமே ஓடும். ஆக, கதைதான் படங்களின்
வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது.

இந்தநிலையில், தெலுங்கில் வெளியான மரியாதை ராமண்ணா படத்தின் தமிழ் ரீமேக்கான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் நாயகனாக நடிக்கும் சந்தானம், ஒவ்வொரு விசயத்தையும் பாத்து பாத்து செய்து வருகிறார். படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்குவதில் தொடங்கி, ஸ்கிரிப்ட் எழுதுவது என தொடர்ந்து இப்போது படத்திற்கான அலுவலக பூஜையை நல்ல நாள் பார்த்து செய்துள்ளார்.

அதாவது சினிமா உலகில் ஆகாத மாதம் என்று கருதப்படும் ஆடி மாத்தில் பூஜை போட்டால் படம் ஓடாது என்பதால் ஆனி மாதம் கடைசி நாள் அலுவலக பூஜையை நடத்தியுள்ளார் சந்தானம். என்னதான் இப்போது பல படங்களின் வெற்றியை, தான் தீர்மானிக்கிற காமெடியனாக இருந்தாலும், நேரமும் காலமும்தான் வெற்றியை தீர்மானிப்பதாக நினைக்கிறார் சந்தானம், என்பதைத்தானே இது சுட்டிக்காட்டுகிறது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget