விண்டோஸ் 7ம் விவரமான ஆளும்?

போஸ்டர்கள் எடுத்துக்கொள்ளும் ஹார்ட் டிரைவ் விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பல போல்டர்கள் எடுத்துக் கொள்ளும் ஹார்ட் டிஸ்க் இடம் எவ்வளவு என எளிதாகக் கண்டறியலாம். போல்டர் ஒன்றின் ஐகான் மீதாக, மவுஸின் கர்சரை சிறுது நேரம் வைத்திருந்தால், உடன் ஒரு பாப் அப் விண்டோ கிடைக்கும். அதில் போல்டரில் உள்ள அனைத்து பைல்களும் ஹார்ட் டிஸ்க்கில் எடுத்துக் கொண்டுள்ள இடம் எவ்வளவு என்று காட்டப்படும்.
இதன் மூலம் குறிப்பிட்ட போல்டரை எப்படிக் கையாளலாம், ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை எப்படி மற்ற வற்றுடன் பங்கிட்டுக் கொள்ளலாம் என நமக்கு ஒரு மதிப்பீடு கிடைக்கும். 

ஆனால், சிலருக்கு ஹார்ட் டிஸ்க் இடம் கிட்டத்தட்ட காலியான நிலைக்குச் சில வேளைகளில் வந்துவிடும். இப்படிப்பட்ட சூழ்நிலை களில் எந்த பைல்களைக் காலி செய்தால், இடம் கிடைக்கும் என நாம் முயற்சி செய்வோம். இதற்கு, டிஸ்க்கில் உள்ள, ஒன்றுக்கு மேற்பட்ட குறிப்பிட்ட போல்டர்கள் எடுத்துக் கொண்டுள்ள இடம் எவ்வளவு என அறிய வேண்டியதிருக்கும். எடுத்துக் காட்டாக, பல பயனற்ற புரோகிராம்களை அல்லது அதிகம் பயன்படுத்தாத புரோகிராம்களை பதிந்து வைத்திருப்பீர்கள். உங்களுடைய விண்டோஸ் 7, 64 பிட் பதிப்பாக இருந்தால், புரோகிராம்கள் “Program Files” மற்றும் “Program Files (x86) folders” ஆகிய போல்டர்களில் இருக்கும். இந்த போல்டர்கள் பயன்படுத்தும் மொத்த ஹார்ட் டிஸ்க்கின் இடத்தினை எளிய வழி மூலம் அறியலாம். 

1. முதலில் எக்ஸ்புளோரர் விண்டோவில், ஒன்றுக்கு மேற்பட்ட போல்டர்களைத் தேர்ந்தெடுக்கவும். கண்ட்ரோல் கீயினை அழுத்தியவாறே, தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய போல்டர்களை அடுத்தடுத்து கிளிக் செய்திடவும்.

2. பின்னர், அவற்றின் மீது, ரைட் கிளிக் செய்து “Properties” தேர்ந்தெடுக்கவும். அல்லது, கீ போர்டில் ரைட் கிளிக் கீ மற்றும் “R” கீகளை அழுத்தவும். இப்போது ஒரு பாப் அப் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். 

3. விண்டோஸ் 7, தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த போல்டர்கள் ஹார்ட் டிஸ்க்கில் எடுத்துக் கொள்ளும் இடத்தினைக் கணக்கிடும் வரை பொறுத்திருக்கவும். இந்த தகவல்கள் கிடைத்தவுடன், அவற்றின் அடிப்படையில், ஹார்ட் டிஸ்க்கில் பைல்களை நீக்கி, இடத்தை உருவாக்கலாம்.

புரோகிராம்களை மூட இரண்டு கிளிக் விண்டோஸ் 7 சிஸ்டத்தில், விண்டோக்களையும், அப்ளிகேஷன் புரோகிராம்களையும் இரண்டு மவுஸ் கிளிக் மூலம், விரைவாக மூடிவிடலாம். எந்த ஒரு அப்ளிகேஷன் புரோகிராம் விண்டோவின், இடதுபுறம் மேலாக அதன் ஐகான் தெரியும். அதன் மீது கிளிக் செய்து, கிடைக்கும் பாப் அப் மெனுவில், “Close” என்பதனைத் தேர்ந்தெடுத்தால், விண்டோ மூடப்படும். இன்னும் விரைவாக மூட வேண்டும் எனில், அதே ஐகானில், இரண்டு முறை கிளிக் செய்திடவும். எக்ஸ்புளோரர் விண்டோவில், புரோகிராம் ஐகான் காட்டப்படாமல் இருந்தால் என்ன செய்வது? என்ற கேள்வி எழலாம். மற்றவற்றில் எங்கு இடம் பெற்றுள்ளதோ, அதே இடத்தில் மவுஸால் கிளிக் செய்திடவும். பாப் அப் மெனு கிடைக்கும். அல்லது, மேலே கூறியபடி, இருமுறை கிளிக் செய்தால், விண்டோ மூடப்படும்.

டாஸ்க்பாரை நகர்த்த அனைத்து விண்டோஸ் சிஸ்டங்கள் இயங்குவது போல, விண்டோஸ் 7 சிஸ்டமும், டாஸ்க் பாரினை திரையின் கீழாக அமைக்கும். இது போல அமைவதனையே, பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். இயக்க வசதியாக இருப்பதாக உணர்கின்றனர். ஆனால், இப்போது விண்டோஸ் 7 பயன்படுத்தத் தொடங்கியுள்ள பலர், குறிப்பாக மேக் போன்ற வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துபவர்கள், டாஸ்க்பாரினை, மேல், இடது அல்லது வலது புறமாக வைத்து செயல்பட விரும்புகின்றனர். இதனை எப்படி நகர்த்தி அமைக்கலாம் என்று பார்க்கலாம். இதற்கு விண்டோஸ் 7 இரண்டு வழிகள் தருகிறது. 

1. டாஸ்க்பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பாப் அப் மெனுவில், “Lock the taskbar” என்பதில் உள்ள டிக் அடையாளத்தின் மீது மவுஸ் கிளிக் செய்வதன் மூலம், அதனை நீக்கவும். டிக் அடையாளம் இல்லாமல் இருந்தால், அப்படியே விட்டுவிடவும். 

2. இனி, டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில், மவுஸின் இடது பட்டனைக் கிளிக் செய்து, அப்படியே அழுத்தியவாறு வைக்கவும். பட்டன் கீழாக அழுத்தியபடியே இருக்க வேண்டும். பின்னர், டாஸ்க் பாரினை அப்படியே எந்த பக்கம் வேண்டுமானாலும் நகர்த்தி விட்டுவிடலாம். 

3. நீங்கள் விட்டுவிட்ட இடத்திலேயே டாஸ்க் பார் இருக்க வேண்டும் எனில், மீண்டும் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் “Lock the taskbar” தேர்ந்தெடுத்து அதில் டிக் அடையாளம் அமைக்கவும்.  இன்னொரு வழியும் உள்ளது.
டாஸ்க் பார் லாக் எடுத்து, பின்னர், டாஸ்க்பாரினை இழுத்து அமைக்கும் வேலைக்குப் பதிலாக, காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் பாப் அப் விண்டோவில், “Properties” தேர்ந்தெடுக்கவும். 
2. “Taskbar and Start Menu Properties” டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Taskbar location on screen” என்பதனை அடுத்து கிளிக் செய்து, கீழ்விரி பட்டியலைப் பெறவும். இங்கு “Bottom”, “Left”, “Right”, மற்றும் “Top” என நான்கு ஆப்ஷன் கிடைக்கும். உங்களுக்கு எங்கு டாஸ்க் பார் இருக்க வேண்டுமோ, அங்கு நிலை நிறுத்தலாம். தேர்ந்தெடுத்து அமைத்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

விண்டோஸ் மாற்ற மவுஸால் தொடு ஒரு விண்டோவில் செயல் பட்டுக் கொண்டிருக்கையில், இன்னொரு விண்டோவின் இயக்கத்திற்குச் செல்ல வேண்டும் எனில், அந்த விண்டோவில், மவுஸால் கிளிக் செய்வோம்; டாஸ்க்பாரில் அதன் ஐகானில் கிளிக் செய்து தேர்ந்தெடுப்போம். அல்லது ஆல்ட் மற்றும் டேப் கீகளை அழுத்தி, குறிப்பிட்ட விண்டோவிற்குச் சென்று மவுஸால் அழுத்துவோம்.

இந்த வேலைகள் இல்லாமல், எளிதாக, அடுத்த விண்டோவிற்கு மாறும் வழி ஒன்றினை விண்டோஸ் 7 தருகிறது. அந்த விண்டோ மீது, அல்லது ஐகான் மீது, மவுஸின் கர்சரைச் சற்று நேரம் வைத்திருந்தாலே, குறிப்பிட்ட விண்டோ செயல்பாட்டுக்கு வரும். இதற்கு, கர்சர் நகர்த்தலை எளிதாக இருக்குமாறு அமைக்க வேண்டும். இதற்கு,

1. “Start” மெனு கிளிக் செய்து, “All Programs”, “Accessories”, “Ease of Access”, “Ease of Access Center” தேர்ந்தெடுக்கவும். 

2. “Ease of Access Center” விண்டோ திறந்தவுடன், கீழாகச் சென்று, “Make the mouse easier to use” என்பதில் கிளிக் செய்திடவும்.

3. கிடைக்கும் திரைக் காட்சியில், “Make it easier to manage windows”, என்பதற்குக் கீழாக “Activate a window by hovering over it with the mouse” என்பதில் கிளிக் செய்திடவும்.

4. பின்னர், நீங்கள் அமைத்ததனை சேவ் செய்திட, ஓகே கிளிக் செய்து, அடுத்து “Ease of Access Center” விண்டோவினை மூடவும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget