எளியமையான முறையில் உடற்பயிற்சி செய்வது எப்படி

தற்போதுள்ள காலகட்டத்தில் உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியமாக ஒன்றாக உள்ளது. உடற்பயிற்சி செய்வதால் மனஅழுத்தம், சோர்வு, போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும். இப்போது அனைவரும் உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி கூடங்களை படையெடுக்கின்றனர். 

ஆனால் உடற்பயிற்சியை மெதுவாகத் துவக்கி, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டும்.
தினமும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதைக் குறிக்கோளாகவே கொள்ள வேண்டும். தினமும் முப்பது நிமிடங்களாவது உடல் அசைவுடைய பயிற்சிகளைச் செயல்படுத்த திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். 

அவை நடுத்தரமான பயிற்சிகளாக இருத்தல் வேண்டும். அந்தப் பயிற்சிகள், நாம் சாதாரணமாக சுவாசிப்பதைவிட சற்று வேகமாக நம்மை சுவாசிக்கச் செய்ய வேண்டும். உதாரணமாக வேகமாக நடக்கும்போது மூச்சு ஏறுவதைப்போல். அதே நேரம் மிகவும் அதிகமாக மூச்சுத் திணரும் வகையிலும் இருக்கக் கூடாது.  

பயிற்சிகள் ஒரே நேரத்தில் தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு இருக்க வேண்டியது அவசியமில்லை. ஒரு நாளில் ஒன்றுக்கு மேல் பல முறைகள் - அதாவது இரண்டு மூன்று முறைகள் செய்யலாம். ஒவ்வொரு முறைக்குப் பத்து-பத்து நிமிடங்கள் வீதம் என்றும் செய்யலாம். ஆனால் குறைந்த பட்சம் ஒரு முறைக்குப் 10 நிமிடங்களாவது பயிற்சி செய்ய முயல வேண்டும்.  

நமக்கு விருப்பமான பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதைச் செய்யும் போது சலிப்பு ஏற்படாத விதத்தில் இருக்க வேண்டும்.  கொலஸ்ட்ரோலைக் குறைப்பதற்கான சிறந்த பயிற்சிச் செயல்கள் நம் கால்(களின் நரம்பு)களை உபயோகிக்கக் கூடியதே. 

கால் நரம்புகள் வேகமாகச் செயல்படும்போது, நமக்கு அதிகமான அளவில் ஆக்ஸிஜென்(Oxygen) தேவை ஏற்படுகிறது, ஆகையால் இருதயம் வேகமாக இயங்கி இதை நிறைவு செய்கிறது. அவ்வாறு செயல்படுவதால் இருதயம் உறுதியாகி, மிகவும் சீரான முறையில் இயங்க வழி பிறக்கிறது. உதாரணம் சைக்கிள் ஓட்டுதல், நடைப் பயிற்சி செய்தல் போன்றவை.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget