நேற்று சோலார் நாயகி - இன்று உலக நாயகி - நாளை ?

பவர் ஸ்டாருக்கு ஒன் அண்ட் ஒன்லி போட்டி சோலார் ஸ்டார்தான் என்பதை, திருமதி தமிழை 100 நாட்கள் ஓடவைத்து நிரூபித்திருக்கிறார் ராஜகுமாரன். ஸா‌ரி, சோலார் ஸ்டார் ராஜகுமாரன்.

யார் யாரோ நடிக்கும் போது நம் கணவர் நடிக்கக் கூடாதா என்ற தேவயானியின் அறச்சீற்றத்தின் விளைவு, திருமதி தமிழ். சோலார் ஸ்டா‌ரின் இனிமையான சண்டைக் காட்சிகளும், அதி
பயங்கர ரொமான்ஸ் காட்சிகளும் கொண்ட இந்த மகா காவியத்தை, பவர் ஸ்டா‌ரின் லத்திகாவுக்கு இணையாக நூறு நாட்கள் ஓட வைத்து சாதனை படைத்திருக்கிறார் சோலார் ஸ்டார்.

அகில உலக தேவயானி ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவரை நாயகியாக வைத்து, உலக நாயகி என்ற படத்தை விரைவில் தொடங்கயிருக்கிறாராம். நாயகன் சந்தேகமில்லாமல் சோலார் ஸ்டார்தான். உலக நாயகியை உலக மொழிகள் அனைத்திலும் வெளியிட்டு இருநூறு நாட்கள் ஓட வைக்கும் அதிபயங்கர திட்டமும் அவ‌ரிடம் உள்ளது. 

உலக நாயகனை ஒரு சீனுக்கு வந்திட்டுப் போங்க என்று சோலார் ஸ்டார் கட்டளையிட்டாலும் இடுவார் என கதை இலாக அஞ்சுகிறது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget