பாலிவுட் சினிமாவின் முக்கிய நடிகைகளில் வித்யாபாலனும் ஒருவர். ஏராளமான படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்த இவர் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையில் உருவான தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்தமைக்காக தேசிய விருது பெற்றார். அதையடுத்து வித்யாபாலன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்துக்குப்பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொள்வார் என்று பார்த்தால் இப்போதும் முன்பு மாதிரி சினிமாவில்
பிசியாக நடித்து வருகிறார்.
இதுபற்றி வித்யபாலன் கூறுகையில், சினிமாவில் நடிக்க வரும்போது வாழ்நாளெல்லாம் நடித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்கேற்ப இப்போது எனது கணவரும், அவரது வீட்டாரும் எனக்கு எந்த தடையும் விதிக்கவில்லை. அதேபோல், திருமணமாகி விட்டதே என்று என்னை ஓரங்கட்டாமல் எப்போதும்போல் இப்போதும் சான்ஸ் தருகிறார்கள் பாலிவுட் இயக்குனர்கள். அதனால்தான் என்னால் இப்போதும் பிசியாக நடிக்க முடிகிறது என்று சொல்லும் வித்யாபாலன், திருமணமாகி விட்டதே என்பதற்காக கிளாமர் காட்சிகளில் நடிக்க தடை போடுவதில்லையாம். கதைக்கு என்ன தேவையோ அதற்கேற்ப முழு ஈடுபாட்டுடன் நடிக்க தயாராக இருக்கிறாராம்.