சினிமாவுல சேர்ந்து கானா பாட்டு எழுதனும்னு ஒருத்தரும், சினிமாவுல நடிக்கனும்னு ஒருத்தரும் சொந்த ஊர்ல இருந்து கிளம்பி சென்னை வர்றாங்க. எதேச்சையாக 2 பேரும் சந்திச்சுக்கறாங்க. வைரக்கடத்தல் கும்பல் ஒண்ணு கிட்டே மாட்டிக்கறாங்க. கடத்தல் கும்பல் தலைவன், பல கோடி மதிப்புள்ள வைரங்களை முன் பின் அறிமுகம் இல்லா இந்த 2 பேர்
மூலம் கடத்த பார்க்கறான். இவங்க போலீஸ்ல அவங்களை பிடிச்சுக்கொடுத்துடறாங்க. இடைவேளை.
இன்னொரு டிராக். புருஷன் மேல சந்தேகப்படும் ஒரு லேடி. எப்போ பாரு அவங்க கனவில் தன் புருஷன் யாரோ ஒரு லேடி கூட கபடி கபடி விளையாடுற மாதிரி கனவு கண்டு அலர்றவங்க. கனவில் கண்ட ஒரு லேடி அவங்க பங்களாவுக்கு வேலை கேட்டு வருது. அந்த லேடியை பங்களா ஓனர் பொண்ணுன்னு நினைச்சு அந்த 2 லூஸ்கள்ல ஒரு ஹீரோ லவ்வறாரு. இன்னொரு டிராக்ல புருஷனை கொஞ்சம் கூட மதிக்காத ஒருலேடி. அவங்களுக்கு ஒரு பொண்ணு. அந்த பொண்ணை இன்னொரு ஹீரோ லவ்வறாரு.