கோலிவுட் புது வரவு சனா

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா முதல், தற்போதைய மஞ்சிமா மோகன் வரை பல பெண் நட்சத்திரங்கள், கேரளாவில் இருந்து தான்
உதயமாகி இருக்கின்றனர். தற்போது அந்த வரிசையில் சென்னை - 28 - II திரைப்படத்தின் மூலம் இணைந்திருக்கிறார் கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்ற, 17 வயது நிரம்பிய சனா அல்தாப். பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் வெங்கட் பிரபு தயாரித்து இயக்கி இருக்கும் இந்த சென்னை - 28 - II படத்திற்கு இசையமைத்திருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா.

தன்னுடைய தமிழ் என்ட்ரி பற்றி சனா அல்தாப் கூறியிருப்பதாவது... "என்னுடைய பொது தேர்வினால் நான் சில மாதங்கள் நடிப்பில் இருந்து விலகி இருக்கும் சூழ்நிலை இருந்தது. அதன் காரணமாக என்னால் நடிப்பில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால், வெங்கட் பிரபு சார் எனக்கு அளித்த தன்னம்பிக்கையும், ஊக்குவித்தலும், என்னை மீண்டும் நடிப்பில் களம் இறக்கியது. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கும் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் அனுராதா. வெறும் கவர்ச்சி மூலம் படத்தை ஒப்பேற்றும் ஒரு சாதாரண கதாபாத்திரமாக இல்லாமல், கதை களத்தை மேற்கொண்டு நகர்த்த கூடிய வலுவான வேடமாக என்னுடைய கதாபாத்திரம் அமைந்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.

ஆரம்பத்தில் தமிழ் எனக்கு சிறிது கடினமாக இருந்தாலும், வெங்கட் பிரபு, எனக்கு கொடுத்த முறையான பயிற்சி அந்த கஷ்டத்தை எளிதாகி விட்டது. கலைஞர்களுக்கு சிறந்த ஆசானாக திகழ்பவர் வெங்கட் பிரபு. தமிழ் திரையுலகில் முதல்முறையாக காலடி எடுத்து வைக்கும் எனக்கு, நிச்சயமாக சென்னை - 28 - II திரைப்படம் சிறந்ததொரு அடித்தளமாக அமையும்" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் அழகும், ஆற்றலும் ஒருங்கே பெற்ற சனா அல்தாப்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget