டைரக்டர்களை பிரமிக்க வைத்த நயன்தாரா

சினிமாவில் 13 ஆண்டுகளாக நடித்து வரும் நயன்தாரா, இருமுகன் படத்தை அடுத்து காஷ்மோரா, டோரா, இமைக்கா நொடிகள், மீஞ்சூர் கோபி இயக்கும் படம் என நான்கு படங்களில் நடித்து வருகிறார். 

இதில் காஷ்மோராவில் சரித்திர கேரக்டரில் நடித்திருப்பவர், டோராவில் ஹாரர் கதையில் நடித்துள்ளார். இமைக்கா நொடிகளில் போலீஸ் வேடத்தில் நடிப்பவர், மீஞ்சூர் கோபி இயக்கி வரும் படத்தில் மாவட்ட கலெக்டராக
நடித்துக்கொண்டிருக்கிறார். ஆக படத்துக்குப்படம் மாறுபட்ட கதாபாத்திரங்களாக நடித்து வருகிறார் நயன்தாரா.

மேலும், தான் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டர்களுமே அழுத்தமான பதிவாக இருக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வரும் நயன்தாரா, படப்பிடிப்பு தளத்தில் கதாபாத்திரங்களாகவே வலம் வருகிறாராம். கேமரா முன்பு நடிக்கும் போது பெரும்பாலும் சிங்கிள் டேக்கில் ஓகே செய்து விடுகிறாராம். அதேசமயம், ரீடேக் வேண்டும் என்று டைரக்டர்கள் சொன்னால் அவர் துளியும் தயங்குவதில்லையாம். அடுத்து எந்த மாதிரியான பர்பாமென்ஸ் கொடுக்கலாம் என்பதை உடனே டைரக்டரிடம் கலந்து பேசி கேமரா முன்பு ஆஜராகி விடுகிறாராம். அந்த வகையில், நயன்தாராவின் இந்த ஆர்வம் முதல் படத்தில் நடிக்கும் நடிகை கள் போலவே இருப்பதாக அவரை வைத்து படம் இயக்குபவர்கள் சொல்கிறார்கள்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget