விரக்தியில் பன்னீர் புஷ்பங்கள் நாயகி

தமிழ், மலையாளம் உட்பட, பல மொழி திரைப்படங்களில் பிரபலமான நடிகை சாந்தி கிருஷ்ணா, 52, இரண்டாவது திருமணமும் தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்துள்ளார்.


தமிழில், 1981ல், பன்னீர் புஷ்பங்கள் என்ற திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர், சாந்தி கிருஷ்ணா. 1984ல், சக நடிகர் ஸ்ரீநாத்தை திருமணம் செய்தார். 11 ஆண்டுகளில் உறவு கசந்து, இருவரும், 1995ல் விவாகரத்து செய்தனர். இதற்கு பின்,
2010ல், ஓட்டல் அறையில், மர்மமான முறையில், ஸ்ரீநாத் தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே, 1998ல், பெங்களூரில் உள்ள ராஜிவ் தொழில்நுட்ப மைய இயக்குனர் மற்றும் தொழிலதிபர் பஜோர் சதாசிவனை, இரண்டாவது திருமணம் செய்தார் சாந்தி கிருஷ்ணா; இவர்களுக்கு, இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், 18 ஆண்டுக்கு பின், சாந்தி கிருஷ்ணாவும், சதாசிவனும், பெங்ளூரு குடும்ப கோர்ட்டில் பரஸ்பர சம்மதத்துடன், விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவே, சாந்தி கிருஷ்ணா விவாகரத்து செய்வதாக செய்திகள் உலவின.

இதை கடுமையாக மறுத்துள்ள, சாந்தி கிருஷ்ணா கூறியதாவது: திருமணம் செய்வதற்காக, இரண்டு முறை, சினிமாவை உதறியவள் நான். குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காக, சினிமாவை கைவிட்ட நான், இந்த வயதில், மீண்டும் சினிமாவில் நுழைவதற்காகவா விவாகரத்து செய்யப் போகிறேன். சமூக வலைதளங்களில் உலா வரும் இத்தகைய செய்திகளில் உண்மை கிடையாது. இது போன்ற தகவல்களை யார் பரப்புகின்றனர் என தெரியவில்லை. என் முதல் திருமணம் வெற்றிகரமாக அமையவில்லை. பிரிவால் ஏற்படும் துயரத்தை அனுபவித்தவள் நான். இரண்டாவது திருமணம் செய்யலாம் என எண்ணும்போது, மீண்டும் பிரிவு ஏற்படக்கூடாது என்ற வைராக்கியம் ஏற்படும். என்னால் முடிந்தளவு, விட்டுக் கொடுத்து போனேன். அப்படி இருந்தும், அது நிகழ்ந்து விட்டது. இனி, வெறுமனே வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர் விரக்தியுடன் கூறினார்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget