திறமையான நடிப்பில் சமாளிக்கும் த்ரிஷா

திரைப்பட நடிகர், நடிகைகள் தங்களது ரசிகர்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதை அதிகம் விரும்புகிறார்கள். யாரும் தங்களை மறந்துவிடக் கூடாது
என்பதற்காகவும் அடிக்கடி அவர்களுடன் சமூக வலைத்தளங்களில் 'சாட்' செய்து கொண்டும் இருக்கிறார்கள். அப்படித்தான் நடிகை த்ரிஷா நேற்று தன்னுடைய ரசிகர்களுடன் 'சாட்' செய்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

பாலிவுட்டில் பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு சல்மான் கான் என்று பதிலளித்தார். ஹாலிவுட்டில் பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு லியானார்டோ டி கார்ப்பியோ என்றும் பதிலளித்தார். ஆனால், தமிழில் பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு எந்த பதிலையும் அவர் அளிக்கவில்லை. அதை விட திறமையான பதில் ஒன்றைச் சொல்லி ஆச்சரியப்படுத்தினார்.

தமிழில் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார் என ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு த்ரிஷா, “நான் இதற்கு பதிலளிக்காமல் விட்டுடறேன். அவர்களுடைய ரசிகர்கள் என்னுடைய டைம்லைன்ல வந்து சண்டைப் போடறத நான் விரும்பலை,” என பதிலளித்தார். விஜய், அஜித் ரசிகர்களை மனதில் வைத்தே அவர் அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல் விட்டுவிட்டார். இருவருடனும் த்ரிஷா ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் வேறு சிலர் அவர்களிருவரைப் பற்றி தனித்தனியாகக் கேட்டதற்கு த்ரிஷா பதிலளித்திருந்தார். அஜித்தைப் பற்றி, “அஜித்தும் அவருடைய மனைவி ஷாலினியும் ஒருவருக்கொருவர் பொருத்தமாக இணைந்து வாழ்க்கிறார்கள்,” என்றும், விஜய்யைப் பற்றி, “மிகவும் தாராள மனம் கொண்டவர், கருணை மிக்கவர், வல்லவர்” எனவும் கூறியுள்ளார்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget