மவுஸ் சுட்டிகள் தற்போது பெரும்பாலும், வயர் இணைப்பின்றி செயல்படுபவையாகவே கிடைக்கின்றன. இதனால், நாம் கம்ப்யூட்டர்
பயன்படுத்தும் இடத்தினை முழுமையாகப் பயன்படுத்த முடிகிறது. அதிக இடம் தேவைப்படாமல் உள்ளது. இந்த வகை மவுஸ் சுட்டிகள் மூன்று வகை செயல்பாட்டின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன என்பது பலர் அறியாத விஷயமாகும். அதனை இங்கு காணலாம்.
மவுஸ் பயன்படுத்துவதில் பல ஆண்டுகளாக, சிரமம் தரும் ஒரு செயல்பாடு இருந்து வந்தது. அதனை, சி.பி.யு. டவர் பாக்ஸின் பின்புறம் இணைத்துச் செயல்படுத்த வேண்டியதிருந்தது. அதற்கான போர்ட், குறிக்கப்பட்டு கிடைத்தது. அதன் பின், யு.எஸ்.பி. போர்ட் பழக்கத்தில் வந்த பின்னர், மவுஸ் வயர் முனையில், யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துப் பயன்படுத்தும் வகையில் இணைப்பி தரப்பட்டது. இதற்கெனவே, சி.பி.யு. டவர் பாக்ஸின் முன்புறமாக யு.எஸ்.பி. போர்ட்கள் சில தரப்பட்டன.
அடுத்த நிலையாக, வயர் இணைப்பு எதுவுமின்றி செயல்படும் மவுஸ் புழக்கத்திற்கு வந்தது. இத்தகைய மவுஸ் சுட்டிகள், ஒரே மாதிரியாக, ஒரே செயல்பாட்டினைக் கொண்டதாக இருந்தாலும், அவற்றில் மூன்று வகை உண்டு. அவை ஒவ்வொன்றும் ஒரு வகையில், நம் கம்ப்யூட்டருடன் தகவல் பரிமாறி உறவாடுகின்றன. அவற்றை இங்கு காணலாம்.
புளுடூத் மவுஸ் : முதலாவதாக, பெரும்பாலான கம்ப்யூட்டர்களுடன் இணைத்துப் பயன்படுத்தப்படும் புளுடூத் வழி செயல்படும் மவுஸ். இது புளுடூத் தொழில் நுட்பம் செயல்படும் கம்ப்யூட்டர்களுடன் மட்டுமே இணைந்து செயல்படும். இப்போது வருகின்ற லேப்டாப் கம்ப்யூட்டர்கள் பெரும்பாலும் இந்த தொழில் நுட்பம் இயங்கும் வகையிலேயே வடிவமைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டரில், புளுடூத் தொழில் நுட்பத்தினை இயக்க வேண்டும். பின்னர், மவுஸின் புளுடூத் இயக்கமும் இயக்கப்பட்டு, இரண்டும் இணையாக்கப்பட (“pairing”) வேண்டும். கம்ப்யூட்டரில், அருகில் உள்ள புளுடூத் இயக்க சாதனங்களைத் தேடி அறிந்து கொள் என்று கட்டளை கொடுத்தால், அது தானாகவே, அந்த இயக்கம் கொண்டுள்ள மவுஸை அறிந்து இணையாக்கிக் கொள்ளும். புளுடூத் மவுஸின் செயல்பாட்டிற்கான மின் சக்தி, பேட்டரிகள் மூலம் தரப்படுகிறது. சில மவுஸ்களில், ரீ சார்ஜ் செய்து கொள்ளும் வகையிலான பேட்டரிகள் இணைக்கப்பட்டு கிடைக்கின்றன.
வயர்லெஸ் மவுஸ் : வயர்லெஸ் மவுஸ், பெர்சனல் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள ரிசீவருக்கு சிக்னல்களை அனுப்பி செயல்படும். இந்த ரிசீவரை, கம்ப்யூட்டரின் யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துச் செயல்படுத்தலாம். ரிசீவரை கம்ப்யூட்டருடன் இணைத்தால் தான், அது மவுஸ் தரும் சிக்னல்களை கம்ப்யூட்டருக்கு அனுப்ப முடியும். பெரும்பாலான மவுஸ்களில், இந்த ரிசீவர்கள், மவுஸின் பின்புறம் செருகப்பட்டு இணைக்கப்படும் வகையில் கிடைக்கும். மற்றவற்றில் தனியாகக் கிடைக்கும். மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் வயர்லெஸ் கீ போர்ட் மற்றும் மவுஸ் ஆகியவற்றுக்கு ஒரே ரிசீவரை வடிவமைத்து வழங்குகிறது. இத்தகைய மவுஸ்களும் பேட்டரி சக்தியால் இயங்குகின்றன. சிலவற்றில் ரீ சார்ஜ் செய்திடக் கூடிய பேட்டரிகள் இணைந்து கிடைக்கின்றன. மவுஸின் கர்சர், கம்ப்யூட்டரின் திரையில் உங்கள் கட்டளைப்படி இல்லாமல், தன் இஷ்டத்திற்குச் செல்கிறது, தவ்வுகிறது என்றால், மவுஸின் பேட்டரி தன் திறனை பெரும்பாலும் இழந்து விட்டது என்று பொருள்