கண்டிசன் நாயகி சாய் பல்லவி

மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் வெளியான படம் பிரேமம். இந்த படத்தில் சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன்
ஆகிய மூன்று நடிகைகள் நாயகிகளாக நடித்தனர். இவர்களில் தமிழ்நாட்டு பெண்ணான சாய் பல்லவியின் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. முதல் படத்திலேயே கேரள ரசிகர்களின் கனவுக்கன்னியாகி விட்டார். அதையடுத்து, துல்கர்சல்மானுடன் காளி என்ற படத்தில் நடித்தவர், தற்போது பிதா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், பிரேமம் படத்திற்கு பிறகு தமிழில் மணிரத்னம் இயக்கி வரும் காற்று வெளியிடை படத்தில் சாய் பல்லவி நடிப்பதாக இருந்தது. ஆனால், கல்லூரியில் படித்து வரும் அவரால் மணிரத்னம் கேட்டபடி கால்சீட் கொடுக்க முடியவில்லை. அதன்காரணமாக அந்த படத்தில் இருந்து விலகினார். இதற்கிடையே, செல்வராகவன்-சந்தானம் இணையும் படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்க யிருப்பதாக ஒரு செய்தி பரவியுள்ளது.

இந்த நிலையில், இன்னும் சில டைரக்டர்களும் சாய்பல்லவியை தமிழில் நடிக்க வைக்க கதை சொல்லி வருகின்றனர். ஆனால், முழுக்கதையையும் கேட்டு முடிக்கும் சாய் பல்லவி, படத்தில் ஹீரோவுடன் அதிக டப்பிங் சீன்கள் இருக்கக்கூடாது. கிளுகிளுப்பான கிளாமர் உடையணிந்து எக்காரணம் கொண்டும் நடிக்க மாட்டேன். அதோடு நான் கல்லூரியில் படித்து வருவதால் நான் சொல்லும் நாட்களில்தான் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றெல்லாம் கண்டிசன்களை அள்ளி போடுகிறாராம். இதனால், அவரிடம் கதை சொல்லிவிட்டு வந்து டைரக்டர்கள் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget