பொங்கி எழு மனோகரா படத்தில் நாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை அருந்ததி நாயர். அந்த படத்தில் இர்பானுக்கு ஜோடியாக நடித்த அவர்
பின்னர் புதுமுகம் சஞ்சய் நடித்த விருமாண்டியும் சிவனாண்டியும் என்ற படத்தில் நடித்தார். அதையடுத்து விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்தில் நடித்துள்ளார். முந்தைய படங்களை விட இந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்திருக்கிறார். சைக்கோ கணவனிடம் சிக்கிக்கொண்டு அவர் படும் அவஸ்தைகள்தான் அந்த படத்தின் மையக்கருவாம். அதனால் இந்த படத்தை ரொம்ப பெரிய அளவில் எதிர்பார்ப்பதாக சொல்கிறார் அருந்ததி நாயர்.
மேலும் அவர் கூறுகையில், முதல் இரண்டு படங்களிலும் காதல் கதைகளில் நடித்துள்ள எனக்கு இந்த படத்தில நடித்துள்ள குடும்பப் பெண் வேடம் சேலஞ்சிங்காக இருந்தது. முதலில் கதை சொல்லும்போது இவ்வளவு பெரிய வேடத்துக்கு நம்மை எங்கு செலக்ட் பண்ணப் போகிறார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து அந்த வேடத்தைக்கொடுத்தார்கள். அதனால் கதையை உள்வாங்கி நடித்தேன். என் நடிப்பைப்பார்த்து விட்டு அனைவரும் பாராட்டுகிறார்கள். அதனால் சைத்தான் படம் திரைக்கு வரும்போது, எனக்கு இன்னும் வெயிட்டான வேடங்கள் கிடைக்கும். முக்கியமாக முன்னணி ஹீரோக்களின் படங்களும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அதனால்தான் புதிதாக என்னை புக் பண்ண வந்த இயக்குனர்களிடம் சைத்தான் படத்தைப்பார்த்த பிறகு அடுத்த படத்தைப்பற்றி பேசுவோம் என்று கூறியுள்ளேன் என்கிறார் அருந்ததி நாயர்.