சோதனையை சாதனையாக்குவது எப்படி

நாம் அன்றாடம் பல பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தாலும், நமது மனம் என்பது பலவிதமான சிந்தனைகளை உருவாக்கி தனது பணியை செவ்வனே
செய்கிறது. மனசிந்தனைகள் தான் மனிதனின் வளர்ச்சியில், வெற்றியில் பெரும் பங்கு வகிக்கின்றன. நேர்மறை எண்ணங்களுடன் உருவாகும் மனசிந்தனைகள் உடல், மனம், செயல் அனைத்திலும் கலந்து இயக்கம் புரிந்து அவரது வாழ்க்கை பயணத்தை வெற்றியடையச் செய்கிறது.

ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்வியல் நிகழ்வோ பலவித மன சிந்தனைகள் மண்டைக்குள் எழும்பி ஒருவித பதட்டத்துடன் பணியாற்ற செய்யும். அவ்வாறு இல்லாமல் மன சிந்தனையை சீராக, சிறப்புடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

சிந்தனையை சிறப்பாக்கும் சீரிய வழிமுறை :

ஒவ்வொரு மனிதனும் தன் சிறு வயது பருவத்திலிருந்து வளர்ந்த சிந்தனைகள், பள்ளி, கல்லூரி மற்றும் பணிகளில் பெற்ற வெற்றிதான் மனதில் நேர்மறை எண்ணங்களை உருவாக்குகின்றன. இவையே நிகழ்காலத்தில் ஏற்படும் பல சிக்கல்களை தீர்க்க உதவும் இவ்வாறான நேர்மறை எண்ணங்களே மனதை அமைதியாக்கும் சிறந்த சிந்தனைகளை உருவாக்கும்.இதை தவிர்த்து மனதில் தோன்றும் பயம்கலந்த சிந்தனைகள், நிகழ்வுகளில் மோசமான சூழ்நிலை; உறவுகள் நண்பர்கள் கூறிய ஏமாற்றமறிந்த நிகழ்வுகள் போன்றவை அமைதியான மனதில் சூறாவளியாய் வீசி, தடுமாற்றம் ஏற்பட செய்து நிம்மதியற்ற சூழலை உருவாக்கிவிடும்.

நாம் அறிந்தோ, அறியாமலோ உள்நுழைக்கும் எதிர்மறை எண்ணங்கள் தான் வாழ்வை அமைதியற்றதாக மாற்றிவிடுகிறது. ஒருவர் மனதில் தோன்றும் பயம்தான் அவரது பணிகள், வியாபாரம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தகிறது. நேர்மறை எண்ணங்கள் மனதில் சிந்தனையாய் உருவாகும்போது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கிறது.

சோதனைகளை சாதனையாக்கும் முறை :

நமது வாழ்க்கை என்பது சோதனைகள் நிறைந்தது. அதனை புரிந்து கொண்டு சோதனைகளை சாதனைகளாக மாற்றிட வேண்டும். வாழ்க்கை என்பதே “துணிவை சோதித்து பார்ப்பது” என்றார் டூஸா. அதுபோல் சோதனைகள் நிறைந்தது தான் வாழ்க்கை என்பதை புரிந்து செயல்பட்டால் பயத்தை எதிர்கொள்ள தேவையான துணிவு மனதில் தோன்றி, சிக்கல்கள் தீர்வதற்கான வழிமுறை, சூழ்நிலை தோற்றமளித்து சிந்தனையை அமைதிபடுத்தி, தைரியமான சிந்தனை கொண்ட மனநிலை தோன்றுகின்றன.

இத்தருணத்தில் உருவாகும் தீர்வுகள் எதிர்மறை சிந்தனைகளை மாற்றி, தறபோது எடுக்க வேண்டிய பொருத்தமான முடிவுகளை எடுக்க உதவும். அதுபோல் குழப்பம் ஏற்படுத்தக்கூடிய மன சூழலில் அதனை சிறப்பாக மாற்றுவதற்கு ஏற்ற சிந்தனையை மனதில் செலுத்தக் கூடியவாறு மனதினை இலகுவாக வைத்திருக்க பழகினால் பயத்தினால் சிக்கல்கள் ஏற்படுவதை தீர்க்கலாம்.

தடையை தகர்த்தெறிந்து சரியான பாதையில் பயணிப்போம் :

நம்மிடம் இருக்கின்ற செல்வங்களைக் கொண்டு மகிழ்வை ஏற்படுத்திக் கொள்வதும், கடந்த கால வெற்றியை கொண்டு முயற்சிப்பதும், பிறருக்கு நன்மை செய்ய ஆரம்பிப்பதும் நமது சிந்தனைகளை சிறப்பாக்கும் மகத்தான வழீ.

நமது எண்ணங்களில் மாற்றம் செய்யும்போது சிந்தனைகளில் வெற்றிக்கான மாற்றம் தானே உருவாகும். நமது முயற்சியில் ஏதும் தடை ஏற்படின் அதற்கான தவறை கண்டறிந்து, சரியான வழிப்பாதையை தேர்ந்தெடுத்து நமது முயற்சியை தொடர செய்தல் வேண்டும்.

சிறப்பான சிந்தனையே சிறந்த எதிர்காலத்தை தரும் :

நமது ஒவ்வொரு செயலை செய்யும் துவங்கும் முன் அவற்றின் எதிர்மறை பாதிப்புகள் என்ன என்பதை சிந்தித்து அதற்கான தீர்வுகளை ஏற்படுத்தி அதனை நீக்கிவிட்டு நேர்மறையான சிந்தனைகளை சரியான பணிகளை செய்ய தொடங்க வேண்டும்.

புதிய சிந்தனைகள் தான் நமது புதிய முயற்சிகளுக்கு வெற்றியை அளித்து மனதை அமைதி நிலைக்கு அழைத்து செல்லும். எனவே சிறப்பான சிந்தனை மாற்றத்திற்கு நம் மனதை பழக்கிடல் வேண்டும். சிந்தனை மாற்றமே சிறப்பான எதிர்கால முன்னேற்றத்தை தரும். 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget