ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடத்தில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்களாக பேட்ஸ்மேன் சச்சினும், பந்துவீச்சாளராக ஜாகிர்கானும் மட்டுமே உள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) அவ்வப்போது, கிரிக்கெட் வீரர்கள், அணிகளின் செயல்பாட்டை பொறுத்து தரவரிசை பட்டியியல் வெளியிடுகின்றது. இதில் டெஸ்ட், ஒருநாள், டுவென்டி20 போட்டிகளுக்கு தனித்தனியாக வரிசைப்படுத்தப்படுகின்றது.
ஐசிசி வெளியிட்ட நேற்று வெளியிட்ட டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில், முதலிடத்தில் இலங்கை வீரர் சங்கக்கரா தொடர்கின்றார். 2வது இடத்தில் தென்ஆப்பிரிக்காவின் காலிஸ் உள்ளார். பட்டியலில் உள்ள முதல் 10 பேரில் இந்திய வீரராக சச்சின் மட்டுமே நீடிக்கின்றார். சச்சின் 9வது இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து ராகுல் டிராவிட் 15வது இடத்திலும், லட்சுமன் 21வது இடத்திலும் உள்ளனர்.
பேட்ஸ்மேன்களின் பட்டியிலில் இங்கிலாந்து வீரர்கள் பெரும் பின்னடைவை பெற்றுள்ளனர். இங்கிலாந்து வீரர்கள் குக், லென் பேல், கெவின் பீட்டர்சன் உள்ளிட்டோர் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றனர். 6 இடங்கள் சரிந்த பீட்டர்சன் 16வது இடத்தில் நிலைக் கொண்டுள்ளார்.
பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் உள்ளார். 2வது இடத்தில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் தொடர்கின்றார். துபாய் டெஸ்ட் போட்டியில் 10 வி்க்கெட்களை வீழ்த்திய பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் 9 இடங்கள் ஏற்றம் கண்டு, 3வது இடத்தை பிடித்துள்ளார். பட்டியலில் முதல் 10 பேரில் இந்தியா அணியின் சார்பாக ஜாகிர்கான் மட்டுமே 9வது இடத்தில் உள்ளார்.