சின்னத்திரையில் அதிரடியான ரம்யா

சின்னத்திரை மற்றும் பெரிய திரை நடிகை ரம்யா. தற்போது பெப்பர்ஸ் டி.வியில் சாட் வித் ரம்யா என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த
நிகழ்ச்சியில் வாழ்க்கையில் எந்த பிரச்சினை இருந்தாலும் ரம்யாவோடு ஷேர் பண்ணிக்கலாம். அதற்கு அவர் ஆலோசனையும், தீர்வும் சொல்வார். கிட்டத்தட்ட சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மாதிரிதான். பங்கேற்பாளர்கள் தொலைபேசியில் பேசுவார்கள். அதுதான் வித்தியாசம். ரம்யா மனநல நிபுணரோ, அல்லது வழக்கறிஞரோ அல்ல, பிறகு எப்படி பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்கிறார். அவரே அளித்துள்ள விளக்கம்...

"இதை பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் நிகழ்ச்சியாக பார்க்க வேண்டாம். மனதுக்குள் இருப்பதை பூட்டி வைத்திருப்பதை விட மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் மன ஆறுதல் கிடைக்கும் அல்லவா அப்படியான ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம். பிரச்சினைகளை என்னுடன் பேசி தங்கள் மன பாரத்தை இறக்கிக் கொள்கிறார்கள். முடிந்த வரை நான் யோசனை சொல்கிறேன். நிறைய புத்தகங்கள் படிக்கிறேன். டி.வியில் நான் நடித்த கதாபாத்திரங்கள் எனக்கு நிறைய கற்றுத் தந்திருக்கிறது. நான் நடித்த படங்கள், பார்த்த படங்கள் வாயிலாக நிறைய கற்றிருக்கிறேன். அதை வைத்து அவர்களோடு பேசுகிறேன். ஒருவர் மனதை புரிந்து கொண்டு அதை ஆறுதல் படுத்த நல்ல மனசு இருந்தாலே போதும். வாழ்க்கை எவ்வளவு விசித்திரமான மனிதர்களையும், பயணங்களையும் கொண்டது என்பதை இந்த நிகழ்ச்சி எனக்கு உணர்த்தியுள்ளது" என்கிறார் ரம்யா.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget