முன்பெல்லாம் ஒரே படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தால் படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் எதிரும் புதிருமாகத்தான் அமர்ந்திருப்பார்கள். இருவருமே
நான்தான் படத்தில் முக்கிய நாயகி என்று மீடியாக்களிடம் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அதோடு நடிக்கிற காட்சிகளில் இயல்பாக பேசிக்கொள்ளும் அவர்கள் மற்ற நேரங்களில் மருந்துக்கும் பேசிக்கொள்ள மாட்டார்கள். எதிரிகள் போலவே படம் முடியும் வரை இருப்பார்கள். ஆனால் தற்போது அப்படியல்ல. ஒரே படத்தில் எத்தனை நடிகைகள் நடித்தாலும், தோழிகளாகவே பழகுகிறார்கள். யாரிடமும் எந்த ஈகோவும் இல்லை.
அந்த வகையில், அதர்வா-சூரி முக்கிய வேடங்களில் நடித்து வரும் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரணிதா, அதிதி ஆகியோர் நடித்து வருகின்றனர். இவர்களில், ஐஸ்வர்யா ராஜேஷ்-பிரணிதா இருவரும் சில நாட்கள் இணைந்து நடித்தபோது நல்ல தோழிகளாகி விட்டார்களாம். படப்பிடிப்பு தளத்தில் ஓய்வாக இருந்தபோது மனம் விட்டு பேசிய அவர்கள், அப்படத்தில் நடித்து முடித்த பிற கும் மொபைலில் அவ்வப்போது உரையாடி வருகிறார்களாம். அந்த வகையில், அட்ட கத்தியில் நடித்தபோது நந்திதாவின் தோழியான ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது பிரணிதாவும் தனது நெருக்கமான தோழியாகி விட்டதாக சொல்கிறார்.