தமிழ் தொலைக்காட்சிகளில் சில தொகுப்பாளினிகளை பார்ப்பதற்காகவே அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பார்கள். அழகுத் தொகுப்பாளினிகளின் படபடக்கும் பேச்சும், அவர்களின் உரையாடலும் ரசிகர்களை கவரும். 90களில் ஒருசில சேனல்கள் மட்டுமே இருந்தன. பெப்ஸி உமா, மாலா மணியன், ராதிகா பாலா என சில தொகுப்பாளினிகளுக்கு சில ரசிகர்கள் இருந்தார்கள்.
இன்றைக்கு 20க்கும் மேற்பட்ட தமிழ்சேனல்கள் இருக்கின்றன. அதில் வரும் பல தொகுப்பாளினிகள் அழகாய் உடுத்தி, அழகாய் சிரித்து, அழகாய் பேசி ரசிகர்களை கவர்கின்றனர். இதுவே நிகழ்ச்சியின் டிஆர்பிக்கு காரணமாகிவிடுகிறது.
அழகான, அசத்தல் தொகுப்பாளினிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.
முழு கேலரியை பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்
அழகாக பேசுவது மட்டுமல்லாது அசத்தலாய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஐஸ்வர்யா, சீரியலிலும் நம்பர் 1 ஆக வலம் வருகிறார். சன் டிவியில் தொகுப்பாளினியாக இருந்தாலும் ஜெயா டிவி, விஜய் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா.
விஜய் டிவியின் அழகுத் தொகுப்பாளினி திவ்யதர்சினி. நம்ம வீட்டுக் கல்யாணம், ஜோடி, என பல நிகழ்ச்சிகளை வாய் ஓயாமல் பேசி தொகுத்து வழங்குகிறார். டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதார்ஷினி.
சூப்பர் சிங்கர் தொகுத்து வழங்கும் பாவனாவின் உடைகளைப் பார்க்கவே தனி ரசிகர்வட்டம் இருக்கிறது. பாவனாவின் ஸ்டைலான பேச்சும், நிகழ்ச்சியின் டிஆர்பியை அதிகரிக்கச் செய்கிறது.
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ரம்யா அசத்தல் அழகுத் தொகுப்பாளினி என்று பெயரெடுத்தவர்.
திவ்யதர்ஷினியின் சகோதரி பிரியதர்ஷினி சன் டிவியில் இருந்து கலைஞர் டிவியில் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இப்போது நம்ம வீட்டுக் கல்யாணத்தை தொகுத்து வழங்குகிறார். பத்தாண்டுகளுக்கு மேலாக அழகு நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக வலம் வருகிறார் பிரியதர்ஷினி.
நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக இருந்து சீரியலில் நடித்திருக்கின்றனர். ஆனால் சீரியலில் நடிக்க வந்து இப்போது சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் லதா ராவ். அழகான பேச்சும், அசத்தலான உடையும் நிகழ்ச்சிக்கு கூடுதல் அழகினைத் தருகிறது.