தமிழில், சினிமாஸ் கலபம் ஜகுபர் அலி தயாரித்துள்ள படம் திமில். இந்த படத்தை எஸ்.காதர் இயக்கியுள்ளார். அங்காடித்தெரு மகேஷ், மனீஷா ஜித்,
டிஸ்கோ சாந்தியின் தம்பி அருண், சட்டக்கல்லூரி பட நாயகன் கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு அல்ட்ரின் இசையமைத் துள்ளார். வெங்கடேஷ் அர்ஜூன் ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் எடிட் செய்துள்ளார். தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் திமில் படம் தீபாவளிக்கு பிறகு திரைக்கு வருகிறது.
இப்படம் குறித்து இயக்குனர் எஸ்.காதர் கூறுகையில், அடங்காத மாடும் திமிலை பிடித்தால் அடங்கி விடும். அதேபோல் இந்த படத்தின் நாயகனை, நாயகி எப்படி அடக்குகிறாள் என்பதுதான் கதை. ப்ளஸ்-2 படிக்கும் ஒரு பையனும், பெண்ணும் காதலிக்கின்றனர். ஆனால் போதையின் பிடியில் சிக்கிக்கொள்ளும் ஹீரோ ஒரு பெரிய தவறை செய்கிறான். அது ஹீரோயினியின் கவனத்துக்கு வரும்போது அவள் அவனை எப்படி தண்டிக்கிறாள் என்பதுதான் கதை. இந்த படத்தை, ஜீ தமிழ் சேனலில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் நிகழ்ச்சியில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து இருக்கியிருக்கிறேன். ஆனால் க்ளைமாக்ஸை வேறு விதமாக நான் சொல்லியிருக்கிறேன். அந்த வகையில் இப்படம் இன்றைக்கு சமூகத்தில் அதிகப்படியாக நடந்து வரும் ஒரு சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கிறது.
இப்படத்திற்காக தனது ஹேர்ஸ்டைலை மாற்றி நடித்துள்ளார் அங்காடித் தெரு மகேஷ். நாயகி மனீஷா ஜித் அதிரடியான ரோலில் நடித்திருக்கிறார். சரத்குமார் நடித்த கம்பீரம் படத்தில் அவரது மகளாக நடித்த அவர், நாயகியாக நடித்த வித்தை, கமரக்கட்டு படங்களை விட இந்த படத்தில் அழுத்தமான பர்பாமென்ஸ் கொடுத்துள்ளார். அவரது நடிப்பு கதைக்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளையும் உணர்ந்து உள்வாங்கி அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள மனீஷா ஜித்துக்கு இந்த படம் திருப்புமுனையாக அமையும்
என்று கூறும் இயக்குனர் எஸ்.காதர், தவறான பாதையில் செல்பவர்களுக்கு இந்த திமில் படம் ஒரு பாடமாக அமையும் என்கிறார்.