மவுஸ் கர்சரின் நிறத்தை மாற்ற வேண்டுமா

கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில், பல வேளைகளில், “இந்த மவுஸ் சுட்டி எங்கே இருக்கிறது என்று தெரியவே இல்லையே?” என்று பலரும் புலம்புவதைக் கேட்டிருக்கலாம். ஏன், நீங்களே இந்த அனுபவத்தைப்
பெற்றிருக்கலாம். அவசரத்திற்கு கர்சரைத் தேடி அமைக்க, இந்த சுட்டியைத் தேடிப் பல முறை மவுஸை அசைத்துப் பார்ப்போம். இதற்குக் காரணம், சில வேளைகளில், ஸ்கிரீனில் காட்டப்படும் வண்ணப் பின்னணியில், மவுஸ் கர்சர் சட்டெனத் தெரியாது. சுட்டியின் வண்ணம் அதில் மறைந்துவிடும். சிலருக்கு அதன் சிறிய உருவம் சட்டெனக் கண்களுக்குத் தோற்றம் அளிக்காது. அதன் அளவினையும், வண்ணத்தினையும் மாற்றி விட்டால், இந்த சிரமம் ஏற்படாது. இவற்றை மாற்றும் வழிகளை, விண்டோஸ் கொண்டுள்ளது. அவற்றை இங்கு பார்க்கலாம்.

இதற்கு பெர்சனல் கம்ப்யூட்டரின் 'செட்டிங்ஸ்' அல்லது 'கண்ட்ரோல் பேனல்' வழி சென்று மாற்றலாம். பெர்சனல் கம்ப்யூட்டரின் 'செட்டிங்ஸ்' வழி விண்டோஸ் 10 மற்றும் விண்டோஸ் 8 ஆகிய இயக்க முறைமைகளில் மாற்றலாம். கண்ட்ரோல் பேனல் வழியினை விண்டோஸ் 10, 8 மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில் மாற்றலாம்.

விண்டோஸ் 10 மற்றும் 8ல் செட்டிங்ஸ் வழி

இந்த சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களில் உள்ள ஸ்டார்ட் மெனுவில் உள்ள செட்டிங்ஸ் ஐகான் மீது கிளிக் செய்திடவும். இதனை, தேடல் கட்டத்தில் “settings” என டைப் செய்தும் பெறலாம். இப்போது செட்டிங்ஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இங்கு “Ease of Access” என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில், இடது பக்கம் கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்ஷன்களில், 'Mouse' என்பதில் கிளிக் செய்திடவும். உங்கள் மவுஸ் சுட்டியை மூன்று அளவுகளில் அமைக்க ஆப்ஷன் கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பும் அளவினைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்தவுடன், மவுஸின் சுட்டி, அதற்கேற்ப மாறும். மாறா நிலையில், சுட்டியின் வண்ணம் வெள்ளை. இதனை கருப்பு அல்லது 'மாறுபட்ட வண்ணத்தில்' மாற்றலாம். இதில் 'மாறுபட்ட வண்ணம்' என்பது, கிடைக்கும் திரை வண்ணத்திற்கேற்ப, சுட்டியின் வண்ணம் தானாக மாறும் நிலை. இதன் மூலம், தானாகவே நன்கு தெரியும்படி, சுட்டியின் வண்ணம் மாற்றப்படும். இதனால், சுட்டி எங்குள்ளது என்பது தெளிவாகத் தெரியும்.

கண்ட்ரோல் பேனல் வழி

விண்டோஸ் 7, 8 மற்றும் 10 சிஸ்டங்கள் இயங்கும் கம்ப்யூட்டர்களில், கண்ட்ரோல் பேனல் வழி எப்படி இந்த மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம். தேடல் கட்டத்தில் 'Control Panel' என டைப் செய்து, கிடைக்கும் முடிவுகளில் முதல் முடிவில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் 'கண்ட்ரோல் பேனல்' விண்டோவில், “Ease of Access” என்பதில் கிளிக் செய்திடவும். இனி கிடைக்கும் Ease of Access பிரிவில், “Change how your mouse works” என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இனி கிடைக்கும் “Change the color and size of mouse pointers” என்ற பாக்ஸில், மவுஸ் சுட்டியின் அளவு, வண்ணம் எப்படி இருக்க வேண்டும் எனத் திட்டமிடுகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும். தொடர்ந்து Control Panel விண்டோ கிடைக்கும். இதன் வலது மேல் மூலையில் உள்ள ஆப்ஷன்களில் “X” என்பதைக் கிளிக் செய்து, விண்டோவினை மூடி வெளியேறவும். இந்த “Ease of Access” விண்டோவில், இன்னும் சில கூடுதல் வசதிகள் காட்டப்படும். இதில் கிடைக்கும் magnifier, high contrast, and keyboard settings போன்றவற்றைப் பயன்படுத்தி, உங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனுபவத்தினை இன்னும் எளிமையானதாகவும், கூடுதல் திறன் கொண்டவையாகவும் மாற்றலாம். 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget