உலகம்
முழுதுமுள்ள கணிணிகளில் இன்டர்நெட் எக்ப்ளோரர் எனும் உலாவியை
பயன்படுத்தும் 90 கோடி கணிணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மைக்ரோ சாஃப்ட்
நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்டர்நெட்
எக்ப்ளோரர் உலாவியை பயன்படுத்துவோரின் கணிணியிலிருந்து அவர்களது ரகசிய
விவரங்களும், சுய விவரங்களும் திருடப்பட்டுள்ளதாக டெய்லி மெயில்
பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
புதிதாக
பரவி வரும் வைரஸால் வின்டோஸ் XP (SP3), வின்டோஸ் விஸ்டா, வின்டோஸ் 7,
வின்டோஸ் சர்வர் 2003 மற்றும் வின்டோஸ் சர்வர் 2008 (R2) ஆகிய வின்டோஸ்
இயங்குதளங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இருந்த போதிலும் நெருப்பு நரி
(ஃபையர் ஃபாக்ஸ்), கூகுள் க்ரோம் மற்றும் சஃபாரி போன்ற உலாவிகளை
பயன்படுத்தி வரும் பயனாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்த
பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது.