ஜிமெயில் BACKUP எடுக்கும் மென்பொருள்!


அண்மையில் ஜிமெயில் பயனா்களில் ஏறத்தாள 150,000 பேரின் மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டும் அவா்களின் கணக்கு முடக்கப்பட்டும் இருந்தது. இதற்கு காரணம் ஜிமெயிலில் ஏற்பட்ட சிறு குழறுபடி தான்.
என்ன தான் 7.5GB இற்கு மேற்பட்ட இட அளவை ஜிமெயில் வழங்கினாலும் மேலே சொன்னது போன்ற குழறுபடிகளால் ஜிமெயிலை காப்பு (Backup) எடுக்கவேண்டியது அவசியமாகிறது. முக்கியமான மின்னஞ்சல்களை பாதுகாக்கவேண்டுமெனில் வேறு வழியில்லை.
ஆக இந்தப் பதிவில் ஜிமெயிலை காப்பு எடுப்பதற்கென உதவும் மென்பொருள் பற்றியும் அதனைப் பயன்படுத்துவது தொடா்பாகவும் சிறு விளக்கம் தருகிறேன்.
Gmail Backup
முதலில் Gmail Backup மென்பொருளை தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். நிறுவல் செயல்முறை இலகுவானது.
நிறுவியதை திறந்து தேவையான விபரங்களை தட்டச்சு செய்யுங்கள். இங்கு நீங்கள் உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல், காப்பு எடுக்கவேண்டிய கோப்பு (Backup Folder) மற்றும் எந்தத் திகதியிலிருந்து எந்தத் திகதி வரை காப்பு எடுக்கப்படவேண்டும் போன்ற விடயங்களை குறிப்பிடவேண்டும். நீங்கள் உங்கள் மின்னஞ்சல்களை முழுமையாக காப்பு எடுக்கவிரும்பினால் Since date என்பதில் நீங்கள் மின்னஞ்சல் கணக்கை திறந்த திகதியை குறிப்பிடலாம். அப்படியில்லாமல் புதிய மின்னஞ்சல்களை மட்டும் காப்பு எடுக்க
விரும்பினால் Newest emails only என்பதை தெரிவு செய்யுங்கள்.
image
இறுதியாக காப்பு எடுத்தலை தொடங்க Backup என்ற பொத்தானை அழுத்துங்கள். இந்தச் செயன்முறையானது சிறிது நேரமெடுக்கலாம்.
உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்கு ஏதாவது நிகழ்ந்து விட்டால் நீங்கள் எடுத்த காப்பில் இருந்து மின்னஞ்சல்களை மீள் நிறுவிக் கொள்ளலாம். இதற்கு மேலே சொன்னது போல உங்கள் மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல், காப்பு இருக்கும் கோப்பு போன்ற விபரங்களை குறிப்பிட்டு Restore என்ற பொத்தனை அழுத்துங்கள்.
இறுதியாக ஒரு குறிப்பு. இந்த Gmail Backup ஆனது மின்னஞ்சல்களை .EML வடிவில் காப்பு எடுப்பதால் எந்த ஒரு மின்னஞ்சல்களை பார்வையிட உதவும் மென்பொருளைக் கொண்டும் இதனைப் பார்வையிட முடியும். இன்னொரு விசயம் ஜிமெயில் ஆனது அரட்டை உரையாடல்களை சேமித்து வைத்துக்கொள்கிறது. ஆனால் இந்த Gmail Backup ஆனது அவற்றை காப்பு எடுப்பதில்லை.
நல்லது. இந்தப் பதிவு உங்களுக்கு ஏதேனும் விதத்தில் உதவியிருந்தால் வாக்குப் போட்டு கருத்துச் சொல்லுங்கள்.




Downloads:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget