இந்திய மாணவருக்கு பேஸ்புக்கில் கோடியில் சம்பளம்


ஆண்டுக்கு ரூ.1.34 கோடி சம்பளத்தில் இந்திய மாணவரை பணியமர்த்தியுள்ளது சமூக வலைதளமான பேஸ்புக். அலஹாபாத்திலுள்ள மோதிலால் நேரு தொழில்நுட்ப கழகத்தில்(எம்என்என்ஐடி) அந்த மாணவர் பிடெக் பயின்று வருகிறார். இந்த தகவலை எம்என்என்ஐடியின் நிர்வாக இயக்குனர் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
இதை ஃபேஸ்புக் அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார்.
அந்த மாணவர் பற்றிய பெயர் உள்ளிட்ட இதர விபரங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடவில்லை என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஃபேஸ்புக்கில் பணியில் சேர இருக்கும் அந்த மாணவர் தற்போது இறுதியாண்டு பயின்று வருகிறார்.
இன்னும் 4 மாதங்களில் படிப்பை முடித்தவுடன் பணியில் சேர உள்ளார். எடுத்தவுடன் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான ஊதியத்தில் பணியில் சேரும் மாணவர் என்ற பெருமையை அவர் பெற இருக்கிறார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்