சுறா புட்டு

தேவையான பொருட்கள்

சுறா மீன் – 1/2 கிலோ
சாம்பார் வெங்காயம் – 200 கிராம்
பூண்டு – 10 பல்
பச்சை மிளகாய், மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி

செய்முறை

* ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து சுறாவை வேக விடவும்.
* சுறா வெந்த பிறகு தோல், முள் நீக்கி விடவும், சதைப் பகுதியை மட்டும் உதிரி உதிரியாகச் செய்து
கொள்ளவும்.

* ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், கறி வேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
* வெங்காயத்தை சேர்த்து முக்கால் பாகம் வதக்கவும். பின் பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* பின்பு சுறாவை சேர்த்துக் கிளறவும். உப்பை சரி பார்க்கவும்.
* ரொட்டித் துண்டு மாதிரி சுறா வெந்து உதிரி உதிரியாக வந்ததும் இறக்கி விடவும்.
* இது பார்ப்பதற்கு முட்டைப் பொரியல் மாதிரி இருக்கும். சுவை சூப்பராக இருக்கும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget