நீரிழிவை யோகத்தால் கட்டுப்படுத்தலாம்



பெங்களூரில் செயல்பட்டுவரும் சுவாமி விவேகானந்தா யோக ஆராய்ச்சி பல்கலைக்கழகமும் ஆரோக்யா சித்த மருத்துவமனையும் இணைந்து “நீரிழிவை யோகத்தால் கட் டுப்படுத்தலாம்“ என்ற கருத்தரங்கத்தை ஜனவரி 23ம் தேதியன்று சென்னை ஃப்லிம் சேம்பர் அரங்கத்தில் நடத்தின.
இருதய நோய் நிபுணர் டாக்டர் எஸ்.தணிகாசலம் விழாவை தொடங்கிவைத்து தலைமையுரை ஆற்றினார். “எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதே நமது உடனடி தேவை” என்று தனது உரையில் குறிப்பிட்டார் தணிகாசலம்.\

நீரிழிவைக் கட்டுப்படுத்துவதில் சித்த மருத்துவத்தின் பங்கினைப்பற்றி தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர். மாணிக்கவாசகம் உரையாற்றினார். “நீரிழிவில்  இரண்டு வகைகள் உள்ளன. இன்சுலின் சுரக்காமல் போவதை முதல் வகை என்கிறோம். இதை யோகாவால் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது. ஆனால் இரண்டாம்  வகை நீரிழிவை தொடர்ந்து யோகப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். தேசிய சித்த மருத்துவம் ஒவ்வொரு புதன் கிழமையும்  நோயாளிகளுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் யோகப்பயிற்சியை நடத்திவருகிறது. இரண்டாம் வகை நீரிழிவை எண்பது சதவீதம் முன்கூட்டியே தடுக்க முடியம் என் பதால் வருமுன் காத்துக்கொள்வதே சிறந்த மருத்துவம் ஆகும்“ என்றார் மாணிக்கவாசகம்.

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஆனந்தன் பயிற்சிப்பட்டறையை துவக்கி வைத்தார். “எண்ணியல், எழுத்தியல், அளவீட்டியல், வானவியல் போல  சித்தவியலும் தமிழர்களின் பாரம்பர்யமான அறிவியல் அறிவு. இடகலை, பிங்கலை, சுழுமுனை போன்று பல தமிழ் வார்த்தைகள் சமஸ்கிருதமயமாக்கப்பட்டுவிட்டன. இந் தியாவில் வேத மரபு, தாந்த்ரீக மரபு என்று இரண்டு உள்ளது. சித்த மருத்துவம் தாந்ந்ரீகத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார் ஆனந்தன்.
நீரிழிவைக்குறித்த டாக்டர் சிவராமனின் “ஏழாம் சுவை” நூலை த.உதயச்சந்திரன் வெளியிட நடிகை ரோகிணி பெற்றுக்கொண்டார். நூலை வெளியிட்டவர், பெற்றுக்கொண் டவர் இருவருமே தங்களுக்கு நீரிழிவு இருப்பதாகச் சொன்னது சுவாரஸ்யம்.
“யோகம் ஆன்மீகத்திற்குள் அடங்காது. அது ஒரு தத்துவம். யோக மரபு கடவுள் மறுப்பாளர்களாலேயே வளர்த்தெடுக்கப்பட்டது” என்று தனது ஏற்புரையில் குறிப்பிட்டார்  சிவராமன். அதுசரி... அது என்ன ஏழாம் சுவை? உணவின்மீதான அக்கறையைத்தான் இன்னொரு சுவையாக அடையாளப்படுத்தியிருக்கிறார் டாக்டர் சிவராமன்.
பேராசிரியர் நாகரத்னா யோகாதெரபியின் மூலம் நீரிழிவைக் கட்டுப்படுத்தும் இயக்கத்தைப்பற்றி அறிமுகப்படுத்தியதோடு பார்வையாளர்களுக்கு சில எளிய பயிற்சிகளையும்  கற்றுக்கொடுத்தார். டாக்டர் வெற்றிவேந்தன் நீரிழிவு நோய்க்கான சில யோகப்பயிற்சிகளை பயிற்றுவித்தார்.

டாக்டர் சோனா நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுமுறைகளை பரிந்துரை செய்தார். “நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் அரிசி உணவு உண்ணக்கூடாது, ஆனால் கோதுமை  உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் என்பது சரியானதல்ல. அரிசி, கோதுமை இரண்டுமே ஒரே மாதிரியான கார்பாஹைட்ரேட்டையே வழங்குகின்றன.
கனிவகைகளை உண்ணக்கூடாது என்பதும் தவறானது. கனிவகைகளை உண்பதன் மூலம் நார்ச்சத்து கிடைப்பதோடு இரத்த சர்க்கரையின் அளவும் கட்டுப்பாட்டில் இ ருக்கும். கேழ்வரகைப் பயன்படுத்துவதாலும் நீரிழிவை கட்டுப்படுத்திவிட முடியாது. அதுவும் அரிசி, கோதுமையைப் போலவே கார்போஹைட்ரேட்டைத்தான் கொடுக்கிறது.  மிக முக்கியமாக எந்த உணவுமுறையாலும் நீரிழிவை முற்றிலும் கட்டுப்படுத்திவிட முடியாது, கட்டுப்பாட்டில் மட்டுமே வைத்திருக்க முடியும்“ என்று நீரிழிவு பற்றி சொல் லப்படும் பல கருத்துகளில் உண்மையில்லை என்று அவரது உரையில் வலியுறுத்திப் பேசினார். 
நீரிழிவு மருத்துவத்தில் சித்த மருத்துவ மூலிகைகளைப் பயன்படுத்துவதைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் டாக்டர் பாலாஜி நிகழ்ச்சியின் இறுதியில் பேசினார். இ ன்சுலின் பணியை துரிதப்படுத்தும் மெட்போர்மின் மருந்து ப்ரெஞ்ச் லைலாக் என்ற தாவரத்திலிருந்துதான் உருவாக்கப்படுகிறது. அலோபதி மருத்துவத்திற்கும்  தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் மூலக்கூறுகள் அடிப்படையாக இருக்கின்றன. அலோபதி மருத்துவமே தாவரத்திலிருந்து ஒரு மூலக்கூறை எடுத்து பயன்படுத்தும்போது  சித்த மருத்துவத்தில் அதற்கு இணையாக பல மூலிகைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றையும் மருத்துவத்திற்குப் பயன்படுத்தலாம் என்றார் பாலாஜி.
 அப்படி மருத்துவக் கணங்கள் கொண்ட மூலிகைகள் என்னென்ன என்று அறிந்துகொள்ள ஆசையா? வசம்பு, வெந்தயம், சுண்டைக்காய், பாகற்காய், பார்லி, வசம்பு,  வலம்புரிக்காய், வெள்ளரிக்காய், சிவப்பு சந்தனம் என்று தொடர்கிறது பட்டியல்.
சித்த மருத்துவத்தில் யோகம், வைத்யம் இரண்டாலும் நீரிழிவைக் கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். பக்க விளைவுகள் இல்லாத மாற்று மருத்துவ த்தின் மீது அக்கறை உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்...

 

 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget