இது உங்கள் கணிணியை பயமுறுத்தும் மென்பொருள்

Dr.Windows என்ற பேரை கண்டவுடன் நீங்கள் ஏதோ கணிணியை பாதுகாக்கும் ஒரு மென்பொருள் என நினைக்கலாம். ஆனால் அது தான் இல்லை. இது உங்கள் நண்பர்களை பயமுறுத்தி ஏமாற்றி விளையாட உதவும் ஒரு மென்பொருள்.எப்படி என்று பார்ப்போம்.

இந்த மென்பொருளை நிறுவியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணிணியை பாதுகாப்பது போல் தோன்ற வைக்கும். உதாரணமாக கீழே உள்ள படங்களை பார்க்க


"Protection Enabled" ,"Dr.Windows is loaded and protecting this computer" என்று நமது கணிணியை பாதுகாப்பது போல் காட்டும். ஆனால் அது உண்மையில்லை. இந்த மென்பொருளின் வேலையே இது போல பொய்யான,விளையாட்டான அல்லது பயமுறுத்தும் செய்திகளை காட்டுவது தான்.உதாரணமாக கீழே உள்ள படத்தை பார்க்க


மேலே உள்ள Restart என்ற பட்டனை நீங்கள் அழுத்தினாலும் உங்கள் கணிணி Restart ஆகாது. அந்த திரை மட்டுமே Close ஆகும். இது போல் பல பொய்யான பயமுறுத்தும் செய்தியை மட்டுமே காட்டும். இதை உங்கள் கணிணியிலோ அல்லது உங்கள் நண்பர்கள் கணிணியிலோ அவர்களுக்கு தெரியாமல் நிறுவி அவர்களை பயமுறுத்தலாம்.


இதில் எத்தனை நிமிடங்களுக்கு ஒருமுறை இதே போல் செய்திகள் வரவேண்டும் என நீங்கள் அமைத்து கொள்ளலாம். நீங்களே உங்களை நண்பர்களை பயமுறுத்த ஒரு செய்தி உருவாக்கி கொள்ளலாம். உங்கள் கணிணியில் மென்பொருள் நிறுவிய இடத்திற்கு சென்று C:\Program Files\DrWindows\Dialogs என்ற Folder ல் உள்ள .cfg என்று கோப்புகளை Edit செய்து நீங்களே ஒரு செய்தி உருவாக்கி கொள்ளலாம் அல்லது நீங்களே கீழே உள்ளது போல் ஒரு கோப்பு உருவாக்கி கொள்ளலாம். உதாரணமாக

Sample Dialog Coffee.cfg:

Title: Fatal Error
Text: Low level of coffee or wrong kind of coffee detected.\nTake a break and refill your cup.
Bitmap: images\cup.ico
Wave: sounds\Windows XP Battery Low.wav
Button: Oh, yes, thanks
Button: Remind me
Button: More Info


மேலும் இதை உங்கள் நண்பர் கண்டுபுடிக்காமல் இருக்க Options வசதியை மறைத்து கொள்ளலாம். வேண்டுமென்றால் Ctrl + Right Mouse Key அழுத்தி வரவழைத்து கொள்ளலாம்.



  இந்த மென்பொருளை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


Downloads:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget