முட்டை சைவமா? அசைவமா? என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இன்றைக்கு பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் உணவுப்பொருளாக இருந்து வருகிறது. முட்டையில் உள்ள சத்துக்களே இதற்கு காரணமாகும். முட்டையில் வைட்டமின்கள், புரதம், கொழுப்புச்சத்து முதலானவை அளவாக அமைந்துள்ளன. முட்டையில் உள்ள புரதசத்தில் மனித உடலுக்குள் தேவையான புரதக்கூறுகள் சமச்சீர் அளவில் அமைந்துள்ளன.Image
எனவே வெள்ளைக்கரு புரதம் என்றும் முட்டைபுரதம் என்றும் இருவகைப்படும் புரதங்கள் முட்டையில் உண்டு. இதில் வெள்ளைக்கரு புரதம்தான் மிகச்சிறந்த புரதமாகும். இதில் கந்தகம் கலந்த புரதக்கூறுகள் அதிகம். இப்புரதம் எளிதில் ஜீரணமாகக்கூடியது. பருப்பு, பால், இறைச்சியில் இருக்கும் புரதத்தைவிட முட்டைபுரதம் மிகுந்ததாகும். மனித உடலில் புது திசுக்கள் வளரவும், தேய்ந்துபோன திசுக்கள் வளரவும் என்சைம், ஹார்மோன் உற்பத்திக்கும் புரதம் இன்றியமையாதது.
முட்டையில் 11 சதவீதம் கொழுப்புச்சத்து இருக்கிறது. கொழுப்புச்சத்து அனைத்தும் முட்டையில் மஞ்சள் கருவில் இருக்கிறது. இது எளிதில் ஜீரணிக்ககூடியது. முட்டையில் 0.63கிராம் லிந்தெலியிக் என்னும் அத்தியாவசிய கொழுப்பு அமிலம் உள்ளது. மேலும் 230 மில்லிகிராம் கொலஸ்டரால் முட்டையின் மஞ்சள் கருவில் உள்ளது. தினமும் ஒரு நபர் 2 முட்டை சாப்பிட்டால் 11 கிராம் கொழுப்புச்சத்து கிடைக்கிறது. வைட்டமின் சி-யைத் தவிர மற்ற எல்லா வைட்டமின்களும் முட்டையில் உள்ளன. தண்ணீரில் கரையக்கூடிய பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின் வெள்ளைக்கருவிலும் மஞ்சள் கருவிலும் உள்ளது. கொழுப்பில் கரையக்கூடிய ஏ, டி வைட்டமின்கள் மஞ்சள் கருவில் அதிகம் உள்ளன. இவைகள் தவிர அலனின், அஸ்பார் டிக் அமிலம், சிங்டைன் குறுமோடாக் அமிலம், கிளைசின், புரொலின், செரின்,தைரோசின்,வேலின் போன்ற புரதசத்துக்களும் முட்டையில் இருக்கின்றன. வெள்ளைக்கருவை விட மஞ்சள் கரு லேசானது. முட்டையின் எடையில் மஞ்சள் கரு மூன்றில் ஒரு பங்கே இருக்கின்றது. வெள்ளைக் கருவில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. அதோடு தாது உப்புக்கள் 0.6 சதவிதம் உண்டு. இது பசும்பாலுக்குச் சமமானது. இதனால் நோயாளிகள் கூட பயமின்றி வெள்ளைக் கருவைச் சாப்பிடலாம் எளிதில் ஜீரணமாகும்.