கணிணியின் வெப்பநிலையை வண்ணத்தில் காட்ட விண்டோஸ் 7 இலவச மென்பொருள்



நாம் பயன்படுத்தும் கணிணியானது குறிப்பிட்ட வெப்பநிலையில் இயங்கிவருகிறது. கணிணி மிக அதிகமான வெப்பநிலைக்குச் (Over heating) சென்றால் அதன் காரணமாக விண்டோஸ் பூட் ஆகும் போது சிக்கல் ஏற்படலாம். மேலும் சிபியுவில் எதேனும் நுண்ணிய பாகங்கள் பழுதடையும் வாய்ப்பும் உள்ளது. கணிணியின் வெப்பநிலையை காட்டுவதற்கு மென்பொருள்கள் நிறைய உள்ளன.



கணிணியின் டாஸ்க் பாரை (Task bar) அவ்வப்போது மாறிவரும் வெப்பநிலைக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட வண்ணத்தில் காட்டுகிற இந்த மென்பொருளின் பெயர் Temperature Taskbar. டாஸ்க் பாரில் தோன்றும் வண்ணத்தை வைத்தே கணிணியின் வெப்பநிலை சீராக உள்ளதா அல்லது அதிகமாக உள்ளதா அல்லது அபாய நிலைக்குச் சென்றுவிட்டதா என்று புரிந்து கொள்ள முடியும்.



இந்த மென்பொருள் மூன்று வண்ணங்களில் கணிணியின் வெப்பநிலையைக் காட்டுகிறது. கணிணி இயல்பாக செயல்படும் போது பச்சை வண்ணத்தில் காட்டுகிறது. வெப்பநிலை அதிகமாகும் போது ஆரஞ்சு வண்ணத்திலும் அபாய நிலைக்குச் செல்லும் போது சிகப்பு நிறத்திலும் கணிணியின் டாஸ்க் பாரை மாற்றிவிடுகிறது.


இந்த மென்பொருள் எளிமையாக கணிணியின் வெப்பநிலையை கண்காணிக்க உதவுகிறது.


தரவிறக்க :


Downloads:




பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget