விண்டோஸ் ஏழு வெளியாகி பல நாட்கள் ஆகிவிட்டாலும் அதன் மேல் அத்தனை பிரியம் இருப்பதாக தெரியவில்லை பலரிடம். எல்லோரும் விண்டோஸ் எக்ஸ்பீ இயங்குதளத்தையே விரும்புகிறார்கள். ஏனெனில் விண்டோஸ் எக்ஸ்பீ பெற்ற வரவேற்பு அப்படி. அதன் எளிமையான தோற்றமும் பயன்படுத்த எளிமையான இடைமுகமும் கூட.ஆனால் உங்கள் கணினியில் விண்டோஸ் 7 ஐ போட்டுவிட்டு எக்ஸ்பீக்கு நீங்கள் ஆசைப்பட்டால் ஒரு வழி இருக்கிறது.
விண்டோஸ் ஏழில் 'XP mode on Windows 7 ' என்ற ஒரு வசதி உள்ளது. இதை வைத்து நீங்கள் எக்ஸ்பீயை விண்டோஸ் ஏழில் இயங்கும் போதே இயக்கலாம். விண்டோஸ் எக்ஸ்பீயில் இயங்கும் பல மென்பொருள்களும் நிரல்களும் ஏழிலும் இயங்கும் படி உள்ளது. சில மென்பொருள்கள் இயங்க வில்லை என்றால் நீங்கள் அந்நேரம் எக்ஸ்பீ பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆனால் இவ்வசதி விண்டோஸ் 7 Professional, Enterprise மற்றும் Ultimate பதிப்புகளில் மட்டுமே செயல்படும்.
ஆனால் இவ்வசதி விண்டோஸ் 7 Professional, Enterprise மற்றும் Ultimate பதிப்புகளில் மட்டுமே செயல்படும்.
தரவிறக்க: