போய் வா பிரவுசரே! போய் வா!

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் பிரவுசரைப் பயன்படுத்தக் கூடாது என்று மக்களைக் கேட்டுக் கொள்வதற்காக, ஓர் இணைய தளத்தை உருவாக்கி உள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா! உண்மை அதுதான். http://ie6count down.com/என்ற தளம் அதைத்தான் செய்கிறது. "பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிரவுசர் ஒன்று பிறந்தது. அதன் பெயர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6. இப்போது அதற்கு விடை கொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது' என்ற வாசகத்துடன் இந்த தளம், மக்களை இன்டர்நெட் பிரவுசர் பதிப்பு 6லிருந்து விலகிச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறது. உலக அளவில் தற்போது 12% பேர், இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனை எப்பாடு பட்டாவது 1% ஆகக் குறைக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் முயற்சிக்கிறது.
இந்த தளத்தில், இந்த பிரவுசரைப் பயன்படுத்துவதனால் என்ன என்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று எச்சரிக்கப்படுகிறது. ஏன் பிரவுசரை அப்கிரேட் செய்து, பின்பு வந்த பிரவுசர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று விவரமாக எடுத்துச் சொல்லப்படுகிறது. 
இந்த அறிவுரைகளைப் பல மொழிகளில் மைக்ரோசாப்ட் எடுத்துரைக்கிறது. ஏனென்றால், ஆங்கிலம் அல்லாத மொழி பேசும் நாடுகளில் தான் இந்த பிரவுசர் இன்னும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் இந்த பிரவுசரைப் பயன்படுத்துபவர்கள் 34.5% பேர். தென் கொரியா, இந்தியா, தைவான், சவுதி அரேபியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் 10% பேர் பயன்படுத்தி வருகின்றனர். 
நீங்கள் எப்படி? நவீனமான பிரவுசரா? பழைய இன்டர்நெட் எக்ஸ்புளோரரா? பதிப்பு 6 என்றால் தயவு செய்து விட்டுவிடுங்கள்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget