ரயிலில் தூங்கிய சர்தார்

ஒரு முறை ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த சர்தாருக்கு தூக்கம் தூக்கமாக வந்தது. தான் இறங்க வேண்டிய இடம் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து விடும் என்பதால் தூங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு யோசனை வந்தது, அருகில் 

உட்கார்ந்திருந்த ஓருவரிடம், தன்னை குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும்படியும், அதற்கு இருபது ரூபாய் தருவதாகவும் சொன்னார். அருகே இருந்த அந்த ஆள் அதற்கு ஒத்துக்கொண்டு, பணத்தையும் வாங்கிக் கொண்டார். சர்தார் நன்கு தூங்க தொடங்கினார். சர்தாரை எழுப்பி விடுவாதாக சொன்ன நன்பருக்கு, ஒரு ஆளை எழுப்பி விடுவதற்க்கு, இருபது ரூபாய் வாங்குவது அவருக்கு கஸ்டமாக இருந்தது. தான் வாங்கிய பணத்துக்கு மேலும் உபயோகமாக வேறு ஏதாவது சர்தாருக்கு செய்ய வேண்டும் என நினைத்தார். தான் ஓரு பார்பர் (முடி திருத்துபவர்) என்பதால், சர்தார் தூங்கிக் கொண்டிருக்கும் போது, அவருக்கு ஷேவ் செய்துவிட்டு (தாடியையும் எடுத்து விட்டார்), சர்தார் இறங்கக்கூடிய இடம் வந்ததும் எழுப்பியும் விட்டார். இதை எதையும் அறியாத சர்தார் நேரே வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு, தன்னை கண்ணாடியில் பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். தன் மனைவியை அழைத்து சொன்னார், "ரயிலில் அந்த மடையன் என்னை எழுப்பி விடுவதற்க்கு பதிலாக வேறு யாரையே எழுப்பிவிட்டு விட்டான்" என்றார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget