சி.டி.எம்.ஏ நெட்வொர்க்கில் காலக்ஸி பாப்

சாம்சங் அண்மையில், காலக்ஸி பாப், காலக்ஸி பிட் மற்றும் காலக்ஸி ஏஸ் என மூன்று மொபைல்களை வெளியிட்டு, தன் எல்லைகளை விரிவு செய்த்து. இவை அனைத்தும் ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கில் இயங்கும் மொபைல்களாகும். இருப்பினும் சி.டி.எம்.ஏ. வகை நெட்வொர்க்கில் இயங்கும் தன் வாடிக்கையாளர்களுக்காக, காலக்ஸி பாப் மொபைலின் சி.டி.எம்.ஏ. மாடல் போனை வடிவமைத்துத் தற்போது விற்பனைக்குக்
கொண்டு வந்துள்ளது. இது ஒரு ஸ்மார்ட் போன் என்றாலும், குறிப்பிட்ட நெட்வொர்க்கின் சேவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இதில் இல்லை. இதில் 800 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர் உள்ளது. ஆண்ட்ராய்ட் ப்ரையோ சிஸ்டம் இயங்குகிறது. 3.14 அங்குல அகல வண்ண, கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை, வை-பி, ஏ-ஜி.பி.எஸ்., A2DP இணைந்த புளுடூத். 3.15 மெகா பிக்ஸெல் கேமரா, ஆர்.டி.எஸ். சிஸ்டம் கொண்ட எப்.எம். ஸ்டீரியோ ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைஇதன் மற்ற குறிப்பிடத்தக்க, அம்சங்களாகும். ஜி-மெயில், யு-ட்யூப் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்ற அனைத்து கூகுள் வசதிகளும் இதில் கிடைக்கும். காலக்ஸி பாப் ரூ.11,198க்கு விலையிடப் பட்டிருந்தது. இதன் சி.டி.எம்.ஏ. மாடல் அதிக பட்ச விலை ரூ. 9,750 எனக் குறிக்கப்பட்டுள்ளது. 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget