பேஜ் மேக்கர் டிப்ஸ்

டெக்ஸ்க் டாப் பப்ளிஷிங் துறையில் உள்ளவர்கள் அதிகம் பயன்படுத்தும் பேஜ்மேக்கர் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராமிற்கான டிப்ஸ்கள் இங்கு தரப்படுகின்றன.

டெக்ஸ்ட் தேர்ந்தெடுத்தல்:
* டெக்ஸ்ட் பைலில் ஏதேனும் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுக்க அதன் மீது கர்சரை வைத்து இருமுறை கிளிக் செய்திடவும். அந்த பாரா முழுவதும் செலக்ட் செய்திட மூன்று முறை கிளிக் செய்திட வேண்டும். 
* முதலில் ஏதேனும் ஒரு இடத்தில் கிளிக் செய்திடுங்கள். பின் மீண்டும் இன்னொரு இடத்தில், பல பக்கங்கள் தாண்டி இருந்தாலும், ஷிப்ட்+ கிளிக் செய்தால் இடையே உள்ள அனைத்து டெக்ஸ்ட்டும் செலக்ட் செய்யப்படும்.
* ஒரு முறை அல்லது இருமுறை கிளிக் செய்து டெக்ஸ்ட் தேர்ந்தெடுத்து விட்டால் பின் எத்தனை முறை ஷிப்ட் + கிளிக் செய்திடும்போதும் அந்த எல்லை வரை அனைத்து டெக்ஸ்ட்டும் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படும்.
* ஆரோ கீகளை அழுத்தினால் கர்சர் நகரும். இதற்கு நம்பர் பேடில் இணைந்திருக்கும் ஆரோ கீகளைப் பயன்படுத்த விரும்பினால் நம் லாக் அணைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது ஆரோ கீகள் உள்ள சிறிய பேடில் உள்ள கீகளைப் பயன்படுத் தலாம். ஆரோ கீகளை கண்ட்ரோல் கீயையும் இணைத்து அழுத்தினால் கர்சர் ஒவ்வொரு சொல்லாகத் தாவும். இடது, வலது, மேல், கீழ் என ஷிப்ட் கீயை ஆரோ கீகளுடன் அழுத்துகையில் டெக்ஸ்ட் தொடர்ந்து அந்த திசையில் செலக்ட் ஆகும்.
எழுத்தின் அளவை குறைக்க:
பேஜ் மேக்கரில் ஏற்படுத்திய ஸ்டோரி டெக்ஸ்ட்டில் குறிப்பிட்ட பாண்ட் சைஸின் அளவைக் குறைக்கப் பல வழிகள் உள்ளன. ஷார்ட் கட் கீகளாக உள்ளவற்றைப் பார்க்கலாம். கண்ட்ரோல் + ஆல்ட் கீகளை அழுத்திக் கொண்டு > அழுத்தினால் எழுத்தின் அளவு 10, 12, 14, 18 என பெரிய சைஸுக்கு மாறும். கண்ட்ரோல் + ஆல்ட் கீகளை அழுத்திக் கொண்டு < அழுத்தினால் எழுத்தின் அளவு மேலே சொன்னபடி குறையும். இப்படி இல்லாமல் ஒவ்வொரு அளவாகக் குறைக்க / அதிகரிக்க வேண்டும் என்றால் கண்ட்ரோல் +ஷிப்ட் கீயை அழுத்தி > அல்லது < பயன்படுத்த வேண்டும். 
டெக்ஸ்ட் மாற்றம்:
தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டில் கீழ்க்கண்ட ஸ்டைல் மாற்றங்கள் ஏற்படுத்த கீ சேர்க்கைகள் தரப்பட்டுள் ளன.
நார்மல் -- எப்5 அல்லது கண்ட்ரோல் + ஷிப்ட் + ஸ்பேஸ் பார்
போல்ட் -- எப்6 அல்லது கண்ட்ரோல் + ஷிப்ட் + B
இடாலிக்ஸ் -- எப் 7 அல்லது கண்ட்ரோல் + ஷிப்ட் + K
சப்ஸ்கிரிப்ட் -- கண்ட்ரோல் + \
சூப்பர்ஸ்கிரிப்ட் -- கண்ட்ரோல் +ஷிப்ட்+ \
அடிக்கோடிட -- கண்ட்ரோல் +ஷிப்ட்+ U
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget